🙏💱 *மூட்டுவலி வராமல் வாழ முத்திரை* 💚❤️
மனித உடலில் அசையும் மூட்டுகளில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு. இந்த மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் உள்ளது. இந்த மூட்டில் சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் உள்ளது. இந்த சுரப்பிகள் சுரக்கும் தன்மை இழந்தாலும். மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டாலும் மூட்டுவலி வரும். மூட்டுத் தேய்மானத்தில் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ், ரூமட்டாய்டு ஆர்த்தரைடிஸ், எலும்புத் தேய்மானம் என்று உள்ளது. இந்த மூட்டுக்கள், மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க முத்திரைகள் உள்ளன.
வாயு முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து ஆள்காட்டிவிரலை மடித்து உள்ளங்கையில் வைத்து அதன்மேல் கட்டைவிரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மாலை இருவேளைகள் செய்யவும்.
அபான முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து மோதிரவிரல் நடுவிரலை மடித்து அதன் மையத்தில் கட்டைவிரல் நுனியை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் செய்யவும்.
உண்ண வேண்டிய பழங்கள்
அன்னாசி பழம், எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை,
பச்சை காய்கறிகள்
வெண்டைக்காய், பூண்டு, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட்.
கீரைகள்: பிரண்டை, முடக்கத்தான் கீரை, முருங்கைக்கீரை, அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளவும்.
January 2022
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது …!
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது…!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,
5 வருடங்களுக்குப்
பின்பே தொழில் கிடைக்கிறது…!
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது…!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்…!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.
90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்…!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை.
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன…!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்
கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..
அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு…!
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல…!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை…!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே…!
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்…!
இறைவா.!
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.!
உன்னிடமே நாங்கள் உதவியும்
தேடுகிறோம்..
#காயம்_எனும்_உடல்
உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி
சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார்.
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் (குற்றாலக் குறவஞ்சி).
காயம் என்பது உடலையும், “சித்தி என்பது வெற்றியையும் குறிக்கும்.
காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே “காயசித்தி என்பர்.
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறும் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த பதிவில் காய சித்தி லேகியம்
எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சாதிக்காய்
வால்மிளகு
லவங்கம்
ஏலரிசி
ஆக்கிராகாரம்
வகைக்கு ஒரு பலம்
(35கிராம்)
சீரகம் 5பலம்
கொடிவேலி வேர்ப்பட்டைச் சூரணம் 2பலம்.
பரங்கிசக்கை 10பலம்
அதிமதுரச் சூரணம் 5பலம்
இந்த பொருட்களை எல்லாம்
வெய்யலில் உலர்த்தி இடித்து சலித்து
எடுத்து
20பலம் பசு நெய் எடுத்து
சட்டியில் விட்டு கீழே தீ வைத்து
பொடித்து வைத்திருக்கும்
சரக்குகளை தூவி கிளறி வேக விட்டு,
வெள்ளை சக்கரை பலம் 20 எடுத்து
40 எலுமிச்சை பழத்தை வெட்டி சாறு எடுத்து வடிகட்டி சாற்றுடன்
சர்க்கரை கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு நன்றாக காய்ச்சி
லோகிய பதத்தில் இறக்கி
குங்குமப்பூ கால் பலம்,
ஒரிஜினல் மாட்டு கோரசனை கால் பலம் பொடித்து போட்டு
நன்றாக கிளறி எடுத்து ஆராவைத்து
ஒரு பாட்டலில் வைத்துக்கொண்டு,
காலை மாலை ஒரு கழச்சிக்காய் அளவு 48நாட்கள் சாப்பிட
உடல் சித்தியாகும்
சகல விதமான நோய்களும் பறந்து ஓடும்.
மருந்து சாப்பிடும் நாட்கள் முழு இச்சாபத்தியம் இருக்க வேண்டும்.
(அதாவது தாம்பத்தியத்தில் ஈடுபட கூடாது)
நன்றி.
சிற்பசாஸ்திரங்களில் -திருவாவடுதுறை ஆதீன வெளியீடான தக்ஷிணாமூர்த்தி என்னும் நூலில் இருந்து
சிற்பசாஸ்திரங்களில் கூறப்படும் ஆசனம் என்பது ஒரு பீடத்தில் அமர்ந்து கால்களை வெவ்வேறு வகையாக வைத்திருக்கும் நிலைகளின் பெயர். இது ஒன்பது வகைப்படும். சிறு வயதில் என் யோக ஆசான் பல முறை கற்று தந்த யோக ரகசியங்கள் இவை.
திருவாவடுதுறை ஆதீன வெளியீடான தக்ஷிணாமூர்த்தி என்னும் நூலில் இருந்து……..
செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம் சேரும். குபேரன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் சிலவற்றை இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
குபேரன் நிதி பெற்ற தலம்
மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோவில். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உப கோவிலாக திகழும் இந்த ஆலயம் பற்றி, திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடியுள்ளார். புண்ணியசேனன் என்பவன், ‘சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்’ என்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார். அதன்படியே தவம் செய்த புண்ணியசேனனுக்கு, நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆணவம் கொண்ட அவன், ஒருவரையும் மதிக்காமல் நடந்துகொண்டான். இதனால் அவனது ஒரு கண் பார்வையை பறித்தார், ஈசன். இதையடுத்து தவறை நினைத்து வருந்திய அவனுக்கு மீண்டும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் குபேரன் என்ற பெயரையும் சிவபெருமான் சூட்டினார்.
திருவானைக்காவல்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். தன்னிடம் இருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் இங்கு தவமியற்றினான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது, மகாலட்சுமியின் அருளால்தான் சாத்தியம்’ என்று சொல்லி மறைந்தார். இதையடுத்து குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இங்குள்ள குபேர லிங்கத்தை, சுக்ர ஓரையில் வெண் பட்டாடை சாத்தி வழிபாடு செய்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
தஞ்சபுரீஸ்வரர்
எல்லோருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் தரும் குபேரன், இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். அவனிடம் இருந்து அந்த நாட்டை பறித்துக் கொண்டான், ராவணன். இதனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் அனைத்தையும் இழந்து வடதிசை நோக்கி வந்து, சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். இங்கு சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள் புரிந்தார். இதனால் இந்த தலம் `சித்தி தரும் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
12 குபரேன் சிற்பம்
செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. இங்கு சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோவில் உள்ளது. இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடும் அருள்பாலிக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்துகின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட் புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
செல்வத்தை மீட்ட குபேரன்
ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்கிற நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடம் இருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்பு ஏற்படும். திருவாரூர் – நாகப்பட்டினம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே உள்ளது, தேவபுரீஸ்வர் கோவில்.
குபேர மகாலட்சுமி
ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோவிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சன்னிதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
செல்வம் வழங்கும் ஆலயம்
சந்திரகுப்தன் என்பவன், தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது அலைந்தவன், கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோவிலுக்குள் புகுந்து நந்தியம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோவிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு, சந்திரகுப்தனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் இத்தலத்தில் தனிச் சன்னிதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.
அரச மரத்தின் அடியில், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை, பூச நட்சத்திரம் அன்று விரதம் இருந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், பணப் பற்றாக்குறை தீரும். செல்வ வளம் கொழிக்கும்.
பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்பு, சதுர்த்தி திதி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து கணபதியை வழிபாடு செய்வதால், செய்யும் காரியங்களில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் விலகும்.
சிவன்- பார்வதி ஆகியோருடன் விநாயகர் வீற்றிருக்கும் உருவத்தை ‘கஜமுக அனுக்கிரக மூர்த்தி’ என்பார்கள். பெற்றோருடன் விநாயகப்பெருமான் வீற்றிருக்கும் இந்தத் திருக்கோலத்தை வழிபடுவதால் பல சிறப்புகள் வந்துசேரும். விநாயகர் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘ஆனந்த புவனம்’ என்று பெயர்.
வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள். அதோடு ஏழை பெண்களுக்கு தானம் கொடுங்கள். அப்படிச் செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில், விரதம் இருந்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள சக்கரபாணி திருக்கோவிலில், சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அதே போல் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் குழலூதும் விநாயகர் காணப்படுகிறார். இதுபோன்ற வித்தியாசமான கோலத்தில் உள்ள விநாயகரை வழிபடும் போது, எதிர்பார்த்த காரியங்கள் எந்த இடையூறும் இன்றி நடந்தேறும் என்பது நம்பிக்கை.
திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.
முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.
இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற மிகவும் பழமையான கோவில் தான் “திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில்”.”ஞீலி” என்றால் சாமானிய மனிதர்கள் உண்ண தகுதியற்ற இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் “கல்வாழை” எனப்படும் அறிய வகை வாழை மரத்தின் பழம். இந்த கல்வாழை மரம் தான் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலின் “தல விருச்சம்” ஆகும். இங்கிருக்கும் வாழை மரங்கள் நிறைந்த தோட்டம் “ஞீலிவனம்” என அழைக்கப்படுகிறது. திருமண தடை மற்றும் திருமணம் காலதாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடக்கச் செய்யும் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
புராணங்களின் படி இக்கோவிலில் “சப்த கன்னிமார்கள்” பார்வதி தேவியை குறித்து தவமியற்றிய போது, அவர்களுக்கு காட்சி தந்த பார்வதி தேவி, சப்த கன்னியர்களையும் இக்கோவிலிலேயே கல்வாழை எனப்படும் அதிசய வாழை வடிவில் இருந்து, வழிபடும் பக்தர்களின் குறைகளை தீர்க்குமாறு அருளினார். எனவே திருமண தடை மற்றும் கால தாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த தெய்வீக வாழைமரங்களுக்கு செய்யப்படும் பூஜை சடங்குகளால், சப்த கன்னியர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெற்று திருமண தோஷம் நீங்குகிறது.
திருமணம் தடை மற்றும் தாமதம் ஆகும் ஆண் மற்றும் பெண் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. சீக்கிரம் திருமணம் நடக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் திருமண தடை பரிகார பூஜைக்கான தொகையை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்பு கோவில் நிர்வாகத்தால் இப்பரிகார பூஜைகளை நியமிக்கபட்டுள்ள அர்ச்சகர்கள், வழிகாட்டிகள் நமக்கு கூறும் முறைப்படி பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு நமக்கு பரிகார பூஜைகளை செய்ய உதவி புரிந்த அர்ச்சகர்கள், வழிகாட்டிகளுக்கு தட்சணை அளிப்பது நல்லது. இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது.
பின்பு கோவிலின் தெய்வங்களான “திருப்பைஞ்சீலி நீலிவனநாதர், ஸ்ரீ விஷாலக்ஷி அம்பாளையும்” அர்ச்சனை செய்து வழிபட்டு, கோவில் பிரசாதங்களை வாங்கி கொள்ள வேண்டும். பின்பு நேரே நமது இல்லங்களுக்கு திரும்பி அக்கோவில் பிரசாதங்களை பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குங்குமம், திருநீறு போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகார முறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.
ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது “ஜென்ம லக்னம்” ஆகிய “ஒன்றாம்” வீட்டில் பெயர்ச்சி ஆவதை “ஜென்ம சனி” என்பார்கள். இந்த ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, உடல் மற்றும் மன ரீதியான அசதி போன்றவை ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
ஜென்ம சனி காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம லக்னத்திலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வார். ஜென்ம சனி நடைபெறும் காலத்தில் சனி பகவானால் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை சனி பகவானின் அருளால் அதிகம் பெறுவதற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, “அனுமன் சாலிசா” மற்றும் சனி பகவானுக்குரிய மூல மந்திரங்களை துதித்து வழிபடுவது நல்லது. புதன்கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபட்டு வர உடல்சார்ந்த துன்பங்கள் இக்காலங்களில் ஏற்படாமல் காக்கும்.
கோவில்களுக்கு தீப எண்ணெயை தானமாக வழங்கி வரலாம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஒரு வேளை உணவு உண்ணாமல் சனி பகவானுக்கு விரதம் இருந்து,கோவிலுக்கு சென்று சனி பகவானின் விக்கிரகத்தின் அடியில் கருப்பு எள் கலந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இந்த சமயங்களில் சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது. துப்புரவு தொழிலாளிகள், கீழ்மட்ட நிலை பணியாளர்கள் போன்றோரிடம் மரியாதையுடன் நடந்து, அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லாசிகள் உங்களுக்கு கிடைக்க செய்யும்.
அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் ” சிங்கலிகா” என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் ” யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு” என்று.
போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் “இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.
கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.
திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.
ஒரு வானரம் சொன்னது ” இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி” என்றது
” சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்” சொன்னது இன்னொரு வானரம்
” ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்” இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் ” ஆமாம் ஆமாம் ” என்றன.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.
” முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ‘ ராம் ராம் ராம்’ என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்” என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.
கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.
அப்போது ஸ்ரீராமன் சொன்னார் ” சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா”
” பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை” என்றான் சுக்ரீவன்.
” இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா ” என்றார் ஸ்ரீராமன்.
ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.
” தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை”
” அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். “என்றார் ஸ்ரீராமன்
அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.
திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.
” அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது.”
ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .
அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!
அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.
எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.
வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.
“பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்” என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.
அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.
அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்
” அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?
இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் “
என்று வாழ்த்தினார்.
பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.
“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே”.
ஜெ,,,
21.1.22.