Home ஆன்மீக செய்திகள் பைரவரை விரதம் இருந்து வழிபடும் முறை

பைரவரை விரதம் இருந்து வழிபடும் முறை

by admin
Bhairava-Viratham_பைரவரை விரதம் இருந்து வழிபடும் முறை

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.

பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவதற்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது.

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம். இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதாரணமான விளக்கு 7 விளக்கு போடலாம்.

You may also like

Translate »