வீட்டில் சண்டை வரும்போது இந்த தவறுகளை செய்தால், வீட்டில் குடியிருக்கும் குலதெய்வமும் மற்ற தெய்வங்களும் வெளியேறிவிடும். பின்பு துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் சுலபமாக நுழைந்துவிடும்.
ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். குறிப்பாக அந்த வீட்டில் குலதெய்வங்களும் நம்முடைய முன்னோர்களும் கட்டாயம் வசிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் நம்முடைய வீட்டையும், நம்முடைய சந்ததியினரையும் பாதுகாப்பது இந்த நல்ல சக்திகள் தான். சில பேரது வீட்டில் இந்த நல்ல சக்திகள் தங்காது. வீட்டை விட்டு வெளியேறி இருக்கும். உங்களுடைய வீட்டில் தொடர் பிரச்சனைகள், தொடர் கஷ்டங்கள், தொடர்ச்சியான துன்பங்கள், வந்துகொண்டே இருந்தால் உங்களுடைய வீட்டிலும், நல்ல சக்தியின் ஆதிகம் இல்லை. கெட்ட சக்திகள் குடிகொண்டு உள்ளது என்பதுதான் அர்த்தம்.
இப்படியாக, நம்முடைய வீட்டை விட்டு இந்த நல்ல சக்திகள் வெளியேறுவதற்கு, நிறைய காரணங்கள் சொல்லப்பட்டு உள்ளன. அதில் சில வகையான காரணங்களை மட்டும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஏனென்றால், இந்த தவறுகளை பெரும்பாலும் நம் எல்லோரது வீட்டிலும், எல்லோருமே செய்கின்றோம் என்று சொன்னால் கூட அது பொய்யாகாது. அந்த குறிப்பிட்ட சில தவறுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?
முதலில் எல்லோரது வீட்டிலும் சண்டை என்ற ஒன்று இல்லாமல் இருக்காது. யார் வீட்டில் தான் சண்டை இல்லை? வீட்டிற்கு வீடு வாசப்படி. ஆனால், சண்டை வரும்போது ஒரு வீட்டில் இருக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, இந்த தவறுகளை செய்யவே செய்யாதீர்கள். முதலில் சண்டை வந்த உடனேயே சிலபேர் கையை எடுத்து அவர்களது தலையில் அடித்துக் கொள்வார்கள்.
அதாவது, ‘எல்லாம் என் தலைவிதி’ அப்படி என்றவாறு கோபத்தில் கையை வேகமாக நெற்றிப்பொட்டில் வைத்து அடித்துக் கொள்வார்கள். அப்போது ஒரு சத்தம் வரும் பாருங்கள்! இது வீட்டிற்கு தரித்திரத்தை மட்டும்தான் தேடித் தரக் கூடியது. இது முதல் விஷயம். தயவு செய்து இனி இந்த தவறை பண்ணாதீங்க. குறிப்பா வீட்டிலிருக்கும் பெண் இந்த தவறை செய்யாதிங்க. ஆண்களும் செய்யக் கூடாது தான்.
இரண்டாவதாக ஆண்கள்! ஆண்களுக்கு கோபம் வந்தால் கையை எடுத்து சுவற்றில் முட்டுவது, கதவை உடைப்பது. குறிப்பாக நிலைவாசல் கதவை எட்டி உதைப்பது, இப்படிப்பட்ட தவறுகளை ஆண்களும் செய்யக் கூடாது பெண்களும் செய்யக் கூடாது.
நில வாசலில் குடிகொண்டிருக்கும் குல தெய்வமும், வெளியேறிவிடும். வீட்டில் இருக்கும் நல்ல சக்தியும் வெளியேறிவிடும். உங்களது பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால், நீங்கள் செய்த இந்த தவறுக்கான தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பீர்கள். நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு தான் கோபம் வந்து, எவ்வளவு தான் சண்டை வந்தாலும் நில வாசல் கதவையும், நில வாசல்படியையோ வீட்டில் இருக்கும் மற்ற கதவையோ எட்டி உதைத்து, உடைக்கக்கூடாது. தலையை கொண்டு போய் நில வாசல் கதவிலும், மற்ற கதவுகளிலும் கூட மூடிக்கொண்டு அழவே கூடாது.
சண்டை எல்லோரது வீட்டிலும் வரும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த சண்டையில் நாம் நடந்துகொள்ளும் விதம், நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, இப்படிப்பட்ட தவறுகளை வீட்டில் நடக்காமல், சண்டையை சிறிய அளவில் சுமூகமாக சீக்கிரமே அளவோடு பேசி முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் நல்ல சக்தி வெளியே சென்றுவிடும். வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழைவதற்கு தடையே இருக்காது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
373
previous post