Home ஆன்மீக செய்திகள் நவக்கிரக வசியம் செய்வது எப்படி.?

நவக்கிரக வசியம் செய்வது எப்படி.?

by admin
விண்ணில் உலவும் கோள்கள் மனிதர் மீதும்-நவக்கிரக வசியம் செய்வது எப்படி

விண்ணில் உலவும் கோள்கள் மனிதர் மீதும்,

உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே சோதிடத்தின் அடிப்படையாகும்.

புவி அண்டத்தின் மையத்தில் இருக்கும் சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே சோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன.

பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள்.

இதையே தமிழர்கள் நவகிரகங்களை,

சூரியன் – கதிரவன்

சந்திரன் – திங்கள்

செவ்வாய் – நிலமகன்,

புதன் – , கணக்கன், புலவன், அறிவன்

குரு – சீலன், பொன்னன், வியாழன்

சுக்கிரன் – சுங்கன், கங்கன், வெள்ளி

சனி – காரி, முதுமகன்

ராகு – கருநாகன்

கேது – செந்நாகன்

             என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

இன்று இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே அன்று சமண சமயத்திலும் ல் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர். கிரகங்களை ஆதியில் சமணர்கள் தீர்த்தங்கரர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அவைகள்,

புதன் – மல்லிநாதர்

சுக்ரன் – புஷ்பதந்தர்

சனி – மூனிசுவிரதர்

குரு – வர்த்தமானர்

சூரியன் – பத்மபிரபர்

சந்திரன் – சந்திரபிரபர்

செவ்வாய் – வாசுபூஜ்யர்

கேது – பார்சுவநாதர்

ராகு – நேமி

           இந்த கோள்கள் எல்லாம் அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகிற்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறது எனச் சோதிட நூல் கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று இன்றளவும் சோதிடம் கருதுகிறது

நவக்கிரகங்களின் தன்மைகள், மற்றும் குணங்களும்

(1) சூரியன்:-

                     எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார் சூரியன்.     

                  ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு.

                 கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார்.

                   சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது. உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.

(2) சந்திரன்:-

                ‘சந்த்ரமா மனஸோஜா’ என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி.

இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலை கணிக்கபடுகிறது.

              இது ஒரு நீர்கிரகம் சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுப பலன் அதிகமாகவும், தேய்பிறையில் பலன்

குறைவாகவும் தரும்.

               தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.

                கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!

(3) செவ்வாய்:-

                       செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும் ரத்தத்திற்கு காரகன் செவ்வாய்.

                       உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய். செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாயின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது. கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவர்.

(4) புதன்:-

                சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன்.

                  கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்பில் புதனை கொண்டே கணிக்கப்படுகிறது. பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை, சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை, சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.

(5) குரு:-

              குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.    

               குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர் குரு.

               புத்திரர், அறிவு, மந்திர சாஸ்திரம்.

யானை, யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.

                இவர் பிரஹஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லை.

(6) சுக்கிரன்:-

                சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார்.       

                 ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.

                  அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.

                  ஆபரணம், இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணமாக சுக்கிரன் விளங்குகிறார்.

(7) சனி:-

             சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவர்.

             நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார்.      

              வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர்.

               வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள், தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை, இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

(😎 ராகு:-

               சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால்.

                அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து கிரக நிலையை அடைந்தார்.

                ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்வார். சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார்.

                     அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி. விஷம், மரணம், பித்தம், பேய் பிசாசு, மது குடித்தல், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, சிறைப்படல், மாந்திரீகம், பிறரை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷ பூச்சிகள் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.

(9) கேது:-

                 ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே.

                 மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.

                  கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.

                 இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயற்படும்.

                   விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவர். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன்.

மனிதனுக்கு ஒரு கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறதேன்றால் ஒன்று அந்த கிரக கதிர்வீச்சீன் சமாளிக்கும் தன்மைக்கொண்ட மருத்துவ பயனுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

அது மேல் பூச்சு மற்றும் உள் மருந்தாகவும் இருக்கலாம். சில மேல் பூச்சு மருந்து பொருட்களை கீழே கூறுகின்றேன்

(1) சூரியன் – கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும்.

            இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

(2) சந்திரன் – தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

(3) செவ்வாய் – வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள்,  மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

(4) புதன் – மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

(5) வியாழன் – கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

(6) சுக்கிரன் – பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

(7) சனி – கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

(😎 ராகு – மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்  சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

(9) கேது – அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம், தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கிரகங்களின் தாக்குதல்களில் இருந்து 100% தப்பித்துக்கொள்ள முடியும்.

இந்த முறைகளை பின்பற்ற தவறினால்

அந்தந்த கிரக வசிய மூலிகைகளை

காப்பு கட்டி மூலிகைக்கு பலி கொடுத்து வேர் எடுத்து நமக்கு உண்டான கிரக தோஷங்களை நிவர்த்தி செய்துக்கொள்ள முடியும்.

           இது பழங்காலத்து முறை மலையை சுற்றுவதை விட்டு தலையை சுற்றும் ஒரு சிறந்த சித்தர்கள் கூறிய முறை..

அசைவ பலி கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் சைவ பலி கொடுத்து மூலிகை எடுத்துக் கொள்லாம்.

(1) சூரியன்:-

                ஒரு ஞாயிற்றுக் கிழமை செம் முருங்கைக்கு காப்பு கட்டி சபநிவர்த்தி செய்து வேர் எடுத்து ஒன்பது நாள் சூரியனுக்கான காயத்ரி மந்திரம் சொல்லி பூஜை செய்து 10வது நாள் தாயத்தில் போட்டு அணிந்து கொண்டால்

சூரியன் நமக்கு வசியம் ஆகும். அதாவது சூரியனிலிருந்து வரும் அதிர்வலைகள் சோதிட ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

(2) சந்திரன்:-

                  திங்கள் கிழமை செம்முருங்கைக்கு பொங்கல் படைத்து சந்திரனுக்கு உண்டான

காயத்திரி மந்திரம் செபித்து வேர் எடுத்து தாயத்தில் போட்டு அணிந்துக்கொண்டால் சந்திரன் வசியம்.

(3) செவ்வாய்:-

                   செவ்வாய்க் கிழமை சிவனார் வேம்பு எனும் செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து செவ்வாய்க்கான மந்திரம் சொல்லி வேர் எடுத்து அணிந்துக்கொண்டால் செவ்வாய் வசியம். செவ்வாய் தோஷமும் தீரும்.

(4) புதன்:-

                   புதன் கிழமை இருவேலி செடிக்கு காப்பு கட்டி வேர் எடுத்து தாயத்தில் போட்டு அணிந்துகொள்ள

புதன் வசியம்.

(5) வியாழன்:-

                   வியாழக்கிழமை செங்கழுநீர் செடிக்கு காப்பு கட்டி பலிக்கொடுத்து மறு வியாழன் அன்று வேர் எடுத்து அணிந்துகொண்டால் குரு எனும் வியாழன் வசியம்.

(6) வெள்ளி:-

                    வெள்ளிக்கிழமை கருவூமத்தன் செடிக்கு பொங்கல் மற்றும் பலி கொடுத்து மறு வெள்ளிக்கு வேர் எடுத்து அணிந்து கொண்டால் வெள்ளி எனும் சுக்கிரன் வசியம்.

(7) சனி:-

             சனிக்கிழமை செவ்வகத்திக்கு காப்பு கட்டி பொங்கல் மற்றும் பலி கொடுத்து மறு சனிக்கு வேர் எடுத்து அணிந்து கொள்ள சனி வசியம், சனி தோஷம் நிவர்த்தியாகும்.

(😎 ராகு:-

              மாதத்தில் வரும் அமாவாசை அன்று எட்டி செடிக்கு பொங்கல் படைத்து 9வது நாள் எடுத்து அணிந்துகொள்ள ராகு வசியம், ராகு தோஷம் நிவர்த்தியாகும்.

(9) கேது:-

                சூரிய கிரகணத்தில் வேம்பு செடிக்கு காப்பு கட்டி அந்தி சந்தி பூஜை செய்து முன்பு சொன்னதைப் போல 9வது நாள் வேர் பிடுங்கி அணிந்துக்கொள்ள கேதுவும் வசியமாவார்.

குறிப்பாக எல்லா கிரகத்துக்கும் காயத்திரி மந்திரம் உண்டு அதை அந்தந்த கிரகத்துக்கான மூலிகை எடுக்கும் போது கட்டாயம் 1008 உரு ஏற்ற வேண்டும். அதேபோல் எல்லா மூலிகைக்கும் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

(பலி என்பது  எலுமிச்சை) மேல் சொன்னதைப் போல் தவறாமல் செய்தால் 100% கிரகங்கள் நமக்கு வசியமாகி அதற்கான பொல்லாத நேரத்திலும் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும் என்பது சித்தர்கள் கூறிவிட்டு சென்ற ரகசியம்.

You may also like

Translate »