Home ஆன்மீக செய்திகள் திருமண வரம் அருளும் மஞ்சமாதா

திருமண வரம் அருளும் மஞ்சமாதா

by admin
Manjamadha-Manja-Matha_திருமண வரம் அருளும் மஞ்சமாதா

சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படியின் வடதிசையில் மஞ்சமாதா கோவில் உள்ளது. சாஸ்தா சந்நிதியில் இருந்து கீழே இறங்காமல் மேம்பாலம் வழியாகவே அம்பாள் கோவிலுக்குச் சென்று விடலாம். திருநடை திறக்கப்படாத சமயங்களில் திரிசூலம் விளக்கு இவைகளை தரிசிக்கலாம். மஞ்சள்பொடி நிறைந்த தட்டில் எரியும் ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக பன்னீரை பக்தர்கள் மீது தெளித்தவாறே மஞ்சள் மாதா தரிசனம் பெறச்செய்வார்கள். மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.

மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை. அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி உபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.

You may also like

Translate »