Home ஆன்மீக செய்திகள் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

by admin
Andal-Slokas_கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்

ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்

ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்

 கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே

-ஸ்ரீகோதாஸ்துதி

பொதுப் பொருள்: கற்பகவிருட்சத்தில் பூக்கும் மலர் போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.

இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். செல்வச் செழிப்பும் ஏற்படும்.

You may also like

Translate »