செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.
கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது. இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
விஷப் பாம்பு தீண்டியவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் குணமடைவர் என்று கருதப்படுகின்றது. இது இந்தக் கோவிலின் முக்கியத்துவத்திற்கான ஒரு காரணமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐயப்பனின் இடது கையில் எப்போதும் சந்தனமும் தீர்த்தமும் (புனித நீர்) தாங்கியிருக்கக் காணலாம். பாம்பு கடித்தவர்களின் விஷத்தைப் போக்க இவ்விரண்டும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.