Home ஆன்மீக செய்திகள் செவ்வாய்க்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதமும்… கிடைக்கும் பலன்களும்….

செவ்வாய்க்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதமும்… கிடைக்கும் பலன்களும்….

by admin
sankatahara-Chaturthi-Viratham-செவ்வாய்க்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதமும்... கிடைக்கும் பலன்களும்....

சங்கடஹர சதுர்த்தி விரதம் மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம். ‘ஹர’ என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், ‘சங்கடஹர சதுர்த்தி’ மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, ‘மகா  சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது.  திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட  நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும்.

You may also like

Translate »