சிவபெருமானும் அப்பதினாறு பேறுகளையும் நந்திதேவருக்கு வழங்கினார்……
அவை:-
(1) வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பெறாத மனம்….
(2) ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை….
(3) பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி…..
(4) நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு…..
(5) நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு….
(6) அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு….
(7) நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை….
(😎 அன்பர்கள் தீது செய்தாலும் அவற்றை சிவச்செயல் என ஏற்கும் தெளிவு….
(9) மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்….
(10) கனவிலும் சிவனடியார்க்கு அடிமையாதல்…..
(11) சிவபெருமானைத் தவிர வேறுயாரையும் கடவுளாக வழிபடாத நிலை….
(12) சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு….
(13) பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்…..
(14) பிறர் பொருள்மீது ஆசை ஏற்படாமை….
(15) நல்ல நோன்புகளை நோற்றிருத்தல்….
(16) நான், எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை….
இந்தப் பதினாறு வரங்களையும் நந்தி தேவர் தனக்காகக் கேட்கவில்லை….
உலக மக்களுக்காகவே சிவபெருமானிடம் வேண்டினார்….
அதனால், தன்னை வணங்குபவருக்கு மட்டுமல்ல நந்திதேவரை வணங்கியவருக்கும் மோட்ச சுகத்தையும் மக்கட்பேற்றையும், பக்தியையும், ஊக்கத்தையும், காரிய சித்தியையும் எல்லா வரங்களையும் அளித்து வருகிறான் சிவபெருமான்…..
நந்தியின் பெருமையை உலகோர் அறிந்து நந்தியைத் தொழ வேண்டும்…
அதன் மூலம் எல்லா வரங்களையும் பெற வேண்டும் என்பதே சிவபெருமானின் சித்தம்….
நானும் நந்தியும் வேறல்ல என்ற சிவபெருமானின் வாக்கிலிருந்து நந்தியைத் தொழுவதும் சிவனைத் தொழுவதும் ஒன்றே என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.