பணக்கார கடவுளான குபேரனுக்கு பணக்கஷ்டம் வந்த போது என்ன செய்தார் தெரியுமா..?
உலகிலேயே பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனாலும் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம். குபேரன் மாதிரி பணக்காரனாக வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அந்த குபேரனுக்கே பணத்தட்டுப்பாடு வந்த போது என்ன செய்தார் தெரியுமா?
போர் ஏற்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்துவிட்டான் குபேரன். செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்தபோது சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். “நெல்லிமரங்களை நட்டு வளர்த்துவிட்டு அது வளர்ந்ததும் என்னை வந்து பார்” என்றார்.
செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமான் சொன்னாததால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தான். நெல்லிமரங்கள் பராமரிப்பிலும் குறைவைக்க வில்லை. ஏனெனில் சிவபெருமானின் ஆணையாயிற்றே.. நாள்கள் கடந்து விட்டது… நெல்லிமரங்கள் அனைத்தும் பூ பூத்தது… காய் காய்த்தது… காய்களெல்லாம் இனித்தது… குபேரனின் வாழ்வு பழமையாக திரும்பிற்று…
சூழ்ச்சி செய்து செல்வம் பறித்த வளங்களையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகளெல்லாம் திரும்ப கிடைத்தது. குபேரனை விட பெரிய அரசனெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்ட தொடங்கினார்கள். இழந்த செல்வங்களோடு மீண்டும் புதிய செல்வங்களும் பெருகியது..
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள்.. எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்… “நெல்லிமரங்கள் வளர்ந்ததா.. இழந்த செல்வம் கிடைத்ததா?” என்றார் சிவபெருமான். “நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்றார் குபேரனும் விடாமல்.. “நீ வைத்தது நெல்லிமரங்கள் அல்ல லட்சுமி தேவிகள்.. உரிய முறையில் அவற்றுக்கு நீரூற்றினாய் அதனால் நீ செய்த பாவங்களைத் தொலைந்து லட்சுமி தேவியின் அருளை பெற்றாய்” என்ற சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதையை சொல்லலானார்.
தேவருலகில் இந்திரன் அமிர்தம் அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். உண்மையில் நெல்லி ஒரு அமிர்தம் தான். இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான், தமிழ் வாழ அவ்வையாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா?
நெல்லி ஒரு காயகல்ப்ப மூலிகை. அதன் காய் ஒரு காயகல்ப்பம், சந்தேகமே இல்லை. நெல்லி காயாகத்தான் இருக்குமே தவிர அது பழம் ஆவதில்லை. அதுவே காயகல்ப்பத்தன்மை. நெல்லியின் மேன்மையை தமிழர் சங்ககாலத்தில் இருந்து அறிந்து வந்திருந்தனர் என்பது அதியமான் அவ்வையார் கதையால் மட்டுமல்ல, கிழவரும் ஐங்குறுநூறு பாடலாலும் அறியலாம்….
அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோ?
சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம் இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள் – இவ்வாறு சுவாமிமலை மகாத்மியம் கூறுகிறது. பூமியின் மிகச்சிறந்த மரம் நெல்லி என்றுத்தான் கூறலாம் .
கோவில்களில் நெல்லி தல விருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது. திருநெல்வாயிலில் உள்ள உச்சிவனேஸ்வரர் சிவாலயத்திலும்; தஞ்சாவூர்- பழையாறை சோமநாதர் சிவாலயத்திலும்; பெரம்பலூர்- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் சிவாலயத் திலும்; திருவாரூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்லிக்கா என்னும் ஊரில் உள்ள நெல்லிவனநாதர் ஆலயத்திலும் தெய்வங்களுக்கு நிகராய் நெல்லி மரத்தினையும் பக்தர்கள் வணங்கி வலம் வருகின்றனர்.
சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்னும் ஊரில் சிறிய குன்றில் சிவன் கருநெல்லி நாதர் என்ற பெயரில் இருக்கிறார்.
நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இந்தியாவின் பலப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் அளவில் சிறியதாகவும் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.
நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். இந்தபழக்கம் எல்லா கிராமத்திலேயும் முன்பு இருந்தது. இப்போது அவர்களுக்கு தெரியுமா தெரியவில்லை. நாம் தான் மினரல் வாட்டருக்கு மாறிவிட்டோமே !
தாவரப்பெயர்:- EMBILICA OFFICINALLIS.
குடும்பம்:- EUPHORBIACEAE.
கருநெல்லி, அருநெல்லி என்ற இரு இனம் உண்டு.
அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை. மிக சிறியதாக இருக்கும்.
கரு நெல்லி எனும் தோப்பு நெல்லி எனும் காய் தான் சத்துநிறைந்தது. உருண்டையாக இருக்கும்.
aavalaa — (Marathi),
amla — Hindi,
amlaki — Bengali,
Nellikka — Malayalam,
Nellikkai –Kannada,
நெல்லி காய் — Tamil
usiri — Telugu,
வேறு பெயர்கள்:- அம்லா, ஆமலகம், கோரங்கம், மிருதுபாலா.
இலை, பட்டை, வேர், காய், காய்ந்த காய், பூ, மற்றும் வேர்பட்டை, விதை அனைத்தும் பயன்தருவது….
சத்துக்கள் விவரம்:-
மாவுச் சத்து-14 கி.
புரத சத்து-0.4 கி.
கொழுப்புச்சத்து- 0.5 கி,
பாஸ்பரஸ்- 21 மி.கி.
கால்ஷியம்-15 மி.கி.
இரும்புச்சத்து – 1 மி.கி.
வைட்டமின் பி1 28 மி.கி.
வைட்டமின் சி 720 மி.கி.
நியாசின் – 0,4 மி.கி.
கலோரிகள் – 60
வேறு எந்த காய் கனியிலும் இதிலுள்ள வைட்டமின் “சி” அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் இருபத்து முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.
சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.
இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.
நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.
உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.
அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
அமலா கூந்தல் தைலம் கேசத்திற்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும்.
உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.
நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்.
நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.
ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற “சயவனபிராச லேகியம்’ அல்லது “நெல்லிக்காய் லேகியம்’ எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.
நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
கடைகளில் “நிஷா ஆமலகி சூரணம்’ என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால்…!!!!
நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பி வைக்கும் உன்னத பணியினை
செய்துவரும் மிகமுக்கிய உள்ளுறுப்பாக இருந்து வருவது இதயம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த இதயம் நன்றாக இருந்தால்தான் இரத்தம் உடல் முழுக்க பாய்ந்து ஓரத்த ஓட்டமுள்ள அதாவது உயிருள்ள மனிதராக நாம் நடமாடமுடியும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இதயம், பலம் பெற வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்ன வென்றால்,
நன்றாகப் பழுத்த நெல்லிக் கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் ஊறி அதன் ஓட்டமும் சீராகும்.
தேரையர் என்னும் சித்தர் கூறுவதையும் பார்க்கலாம்….
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
அர்த்தம்:-
முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். எவ்வளவு இயல்பாக பேசுகிறார்கள் பாருங்கள். மாப்பிள்ளைகள் போல் இருக்கலாமாம், நெல்லிக்காய் சாப்பிட்டால்…!
அப்புறம் என்ன இப்போது தான் நெல்லிக்காய் சீசன், வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்…
இது ஒரு வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும்.
லட்சுமி சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
December 2021
எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும் எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும் !!
உலகத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்டி எழுப்பியவர்கள்தான் சித்தர்கள் ஆவர். அந்த வரிசையில் காகபுஜண்டரே ஆதி சித்தர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர்.
யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். சாதாரணமான மனிதர்களுக்கு இதை நம்புவது கடினமாகவே இருக்கும்.
ஆசான் காகபுஜண்டரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். அகத்தியர் பெருமானுக்கு எண்ணிலடங்கா சித்தர்கள் சீடர்கள் ஆவர். அகத்தியர் பெருமையை கணக்கிட்டு சொல்வதற்கு யாராலும் முடியாது. ஆசான் காகபுஜண்டர் பெருமான் அவர்கள் காகபுஜண்டர் காவியம் ஆயிரத்தில் “அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்” என்று முதல் வரியில் சொல்லியுள்ளார்.
அகத்தியர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், “ஓம் அகத்தீசாய நமஹ” என்றும், மாலையில் அதே போல் பத்து நிமிடம் நாம செபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார். அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறிய முடியாதவொரு இரகசியம் ஆகும்.
அந்த இரகசியங்களை எவ்வாறு சொன்னால் வருங்கால தொண்டர்கள் உணர முடியுமோ? அதற்கேற்றாற்போல் வெளியாக பாடியுள்ளார். மேலும், அவர் பாடல் கேட்பதற்கு இனிமை உடையதாகவும் இருக்கும். அவர் தவம் செய்து தங்கிய இடம் பொதிகை மலை என்ற மேருவாகும். பொதிகை மலைக்கு அரசனும் அவரே ஆவார்.
அவருடைய கருணையே மேருமலைக்கு ஒப்பாகும். அவர் கருணையால்தான் இதற்குமுன் பலகோடி ஞானிகளும் கடவுள்தன்மை அடைந்துள்ளார்கள். மேலும், வருங்காலத்திலும் பலகோடி மானுடர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கடவுள்தன்மை அடைய இருக்கிறார்கள். எனவே, அகத்தியர் பெருமானின் நாமத்தை சொன்னால் நவகோடி சித்தர்களும் நமக்கு உற்ற துணையாக இருந்து மலமாயையும், மனமாயையும், பந்த பாசத்தையும் நீக்கி என்றும் அழியாத பேரின்ப வாழ்வு தருவார்கள்.
நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் “ஓம் அகத்தீசாய நமஹ” என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.
ஒருசிலர் பல சாத்திரங்களை படித்துப்படித்து முதுமை வந்து இறந்து போனாரே தவிர ஒரு கடுகளவும் உண்மை தெரிந்துகொள்ளவில்லை. காரணம், ஆசான் திருவடியை பூசைசெய்து ஆசி பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை. ஞானவாழ்வு என்பது குரு அருளால்தான் கைகூடும் என்று புண்ணியவான்களுக்கு மட்டுமே புலப்படுவதாகும். நல்வினை இருந்தால்தான் குருவருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். புண்ணிய பலம் இல்லாத கசடர்கள் தம்தம் திறமை கொண்டு முன்னேற முயற்சிப்பார்கள். இவர்களெல்லாம் களம் சார்ந்த பதராகும்.
அவர்களிடம் உண்மையை உணர்ந்தவர்கள் சொன்னாலும் யார் உபதேசமும் எனக்கு தேவையில்லை, எனக்கு கல்வி உள்ளது நானே படித்து தெரிந்து கொள்வேன் என்பார்கள். இவர்கள்தான் நடமாடும் சவமாகும்.
அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.
– மகான் காகபுஜண்டர்
மகான் காகபுசண்டர் உலகமக்கள்பால் கருணை கொண்டு மேற்கண்ட பாடலை அருளியுள்ளார். வருங்கால ஆன்மீக தொண்டர்களுக்கு இந்த பாடலே உபதேசமாகும்.
என்னுடைய பேர்சொல்லில் கூட்டிக்கொண்டு
இசைவான பொதிகையிலே ஏறுவார்பார்
உன்னுடைய திறங் கண்டபோது தானே
யுறுதியுள்ள சித்தனென்று பேரும் ஈய்வேன்
மின்னுடைய ஒளிகாட்டி அறுதலமும்காட்டி
மெய்ஞான வீடுபெற நிலையுங்காட்டி
பன்னுடைய சிதம்பரமு மேருபூசைப்
பாலிப்பொம் அஷ்டாங்கம் பரிந்துகாணே.
– அகத்தியர் பூரணசூத்திரம்:216
என்னுடைய பெயரைச் சொல்லி அழைத்தால் எனது சீடர்கள், அவர் விரும்பியதெல்லாம் கொடுத்து என்னுடைய பொதிகைக்கு என்னிடம் அழைத்து வருவார்கள். உனது தவத்தின் வைராக்கியத்தைக் கண்டு தான் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்வேன். உன்னுள் இருக்கும் ஜோதியை கண்டு மகிழ அருள் செய்வேன். மேலும் வீடுபேறு அடையவும், சிதம்பர இரகசியத்தை உணர்த்தி அஷ்டமா சித்துக்களையும் தருவேன்.
எனவே அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்று கொள்வோம்! பெரும்பேற்றை பெற்று பேரின்பம் பெறுவோம்.
🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*🏵️பதினெட்டு சித்தர்களில் தலையாய சித்தர் அகத்தியர். தமிழ் சித்தர்களில் மிகப்பெரும் சித்தராக விளங்கியவர்.சப்த ரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களுள் முதன்மையானவராகவும் விளங்கிய அகத்தியர் முருகப்பெருமானிடம் தமிழைப் பெற்று அதற்கு இலக்கணம் வகுத்துத் தமிழ் மொழியைதீ தமிழர்களாகிய நமக்கு வழங்கிய மகரிஷி அகத்தியர்.*
*🌷கும்பத்திலிருந்து பிறந்தவராகையால் ‘கும்பமுனி’ என்றும், ‘கும்ப சம்பவர்’ என்றும் அகத்தியருக்குப் பெயர்களுண்டு.*
*🌀ஸ்ரீராமருக்கு ‘ஆதித்ய ஹ்ருதயத்தை’ உபதேசித்தவர்* *ஸ்ரீஹயக்ரீவரிடமிருந்து ‘லலிதா சகஸ்ர நாமத்தை’ப் பெற்றுத்தந்தவர்.*
*💠சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர்* *இது மட்டுமன்றி அகத்தியரின் மனைவியான லோபமுத்திரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை ஆவார்.*
*அகத்தியரின் பெருமைகள்:-*
🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁
*🔱சிவபெருமானின் திருமணத்தைக் காண அனைவரும் வட திசையில் இருந்த கையிலைக்கு வந்தமையால் தென்திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்தது. அதனைச் சமப்படுத்த அகத்திய முனிவர் தென்திசைக்கு வந்திருந்து சிவசக்தி திருமணத்தைத் தமிழகத்தில் தரிசித்தவர் ஆவார்.*
*⚜️அகத்தியர் தாம் நினைத்த பொழுதெல்லாம் சிவசக்தியின் திருமணத்தைக் காண வேண்டும் என்று வரம் பெற்று அம்மையப்பரின் திருமணக் கோலத்தைத் தரிசித்த தலங்கள் திருமணத் தலங்களாக வழங்கப்பட்டு மூலலிங்கத்திற்குப் பின்புறம் அம்மையப்பர் ‘திருமணக் கோலத்தில்’ காட்சியளிப்பர்.*
*📕முச்சங்க வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கிய அகத்தியர் ‘அகத்தியம்’ என்னும் நூலை எழுதியவர்*
*அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய பெரிய சக்திகளை பெற்றார்*
*💧 அகத்தியர் இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீரை முழுவதுமாகக் குடித்து விட இந்திரன் கடலுக்கடியில் ஒளிந்து கொண்ட அசுரர்களை அழித்தார். அசுரர்கள் அழிந்தபின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார்.*
*⛰️அகத்தியர் தென்திசை நோக்கி வந்தபோது விந்தியமலை குறுக்கிடவே அகத்தியரைக் கண்டபின் பணிந்து தாழ்ந்தது*
*🥭மாங்கனி வடிவில் இருந்த வாதாபி என்னும் அரக்கனை உண்டு அழித்தவர்.*
*🎼இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் வென்றவர்*
*💦சிவபூஜை செய்ய கமண்டலத்தில் கொணர்ந்த கங்கை நீரை விநாயகர் விநாயகப் பெருமான் உருக்கொண்டு சாய்த்து விட அதுவே காவிரி ஆனது*
*🌻ராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்*
*🍄அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து ‘பன்னிரு படலம்’ என்னும் நூலை எழுதியுள்ளனர்.*
*📚அகத்தியர் சித்த வைத்தியத்திற்கென பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்து நூல்கள் பல இயற்றியுள்ளார். ‘சமரச நிலை ஞானம்’ என்னும் நூலில் உடலிலுள்ள முக்கிய நரம்பு முடிச்சுகள் பற்றி விளக்கமும், ‘அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள்’ என்னும் நூலில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்கு மருத்துவக் குறிப்புகளும் விளக்கப்பட்டுள்ளன.*
*📒’அகத்திய நூல்கள்’ எனும் பெயரில் இருபத்தி நான்கு நூல்கள் இயற்றியுள்ளார். ‘அகத்திய ஞானம்’, அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம், ‘அகத்திய சம்ஹிதை’ என்னும் வடமொழி வைத்திய நூலும் அகத்தியர் இயற்றியவையே.*
*👶🏻அகத்தியரின் முன்னோர்கள் எமலோகக் குழியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு காரணத்தை வினவ ‘உனக்கு வாரிசுகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்’ என்றனர். அதனால் விதர்ப்ப நாட்டு அரசன் மகள் லோபமுத்திரையை மணந்து திருதாசூ என்னும் சற்புத்திரனை ஈன்று தம் முன்னோர்களின் கடன் தீர்த்து அவர்களை நற்கதி அடையச் செய்தார்.*
*அகத்தியர் ‘அனந்தசயனம்’ என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகவும் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.*
*🦚புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து ‘வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு பின்னாளில் அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டு ‘அகத்தீஸ்வரமுடையார் ஆலயம்’ என்றும் அழைக்கின்றனர்.*
*☘️ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் போற்றி போற்றி🍁*
🌺🍃🏵️🍂🍀🌸🍃🌼☘️🍂🍁
ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்.
7ல் சூரியன் திருவண்ணாமலையில் பாதாளலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் செவ்வாய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
7ல் சனி கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் பாதாள சனிபகவானை வழிபட வேண்டும். 7ல் ராகு ராமேஸ்வரத்தில் உள்ள பாதாள பைரவரை வழிபட வேண்டும்.
7ல் கேது காளஹஸ்தியில் உள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும்.
பணப் புழக்கம் அதிகரிக்க:
வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்க சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்குமப்பூ மற்றும் புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பணப்புழக்கம் அதிகரிக்கும். வார வாரம் இலைகள் மற்றும் குங்குமப்பூவை மாற்ற வேண்டும்.
சனியின் தாக்கம் குறைய:
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வர சனியினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். சனிதிசை, சனிபுத்தி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி நடப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குழந்தை பாக்கியம்:
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் 21 மஞ்சள் நிற லட்டு தானம் தர குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்.
கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30-க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். ஏன் என்றால் ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்ய வைப்பதே குளிகை நேரமாகும்.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் இந்த மந்திரத்தை ஜெபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.
நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோவில். இது கும்பகோணம் அருகில் உள்ளது.
தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.
கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.
மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.
மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.
மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.
1. உற்பத்தி (ஏகாதசி),- மார்கழி கிருஷ்ண (பக்ஷம்)-சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
2. மோட்ச மார்கழி-சுக்ல வைகுண்டம் கிடைக்கும்.
3. சபலா தை -கிருஷ்ண-பாபநிவர்த்தி.
4. புத்ரதா -தை சுக்ல–புத்ர பாக்கியம் கிடைக்கும்.
5. ஷட்திலா – மாசி – கிருஷ்ண- அன்னதானத்திற்கு ஏற்றது.
6. ஜயா -மாசி -சுக்ல–பேய்க்கும் மோட்சம் உண்டு.
7. விஜயா பங்குனி- கிருஷ்ண-ராமர் சீதையை மீட்க, பக தாப்யர் எனும் முனி வரின் உபதேசப்படி, விரதம் இருந்த நாள்.
8. ஆமலதி -பங்குனி -சுக்ல- கோ தானம் செய்ய ஏற்றது.
9. பாப மோசனிகா -சித்திரை -கிருஷ்ண-பாவங்கள் அகலும்.
10. காமதா -சித்திரை -சுக்ல- நினைத்த காரியம் நடக்கும்.
11. வருதிந் – வைகாசி கிருஷ்ண-பிரம்மகத்தி தோஷம் நீங்கும்.
12. மோகினி – வைகாசி–சுக்ல பாவம் நீங்கும்.
13. அபார – ஆனி – கிருஷ்ண-குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.
14. நிர்ஜலா (பீம) -ஆனி சுக்ல–எல்லா ஏகாதசி பலனும் உண்டு.
15. யோகினி -ஆடி- கிருஷ்ண-நோய் நீங்கும்.
16. சயிநீ – ஆடி – சுக்ல-தெய்வ சிந்தனை அதிகமாகும்.
17. சாமிகா – ஆவணி கிருஷ்ண- விருப்பங்கள் நிறை வேறும்.
18. புத்ரஜா – ஆவணி – சுக்ல-புத்ர பாக்கியம் கிடைக்கும்.
19. அஜா – புரட்டாசி கிருஷ்ண- இழந்ததை பெற லாம்.
20. பத்மநாபா புரட்டாசி -சுக்ல-பஞ்சம் நீங்கும்.
21. இந்திராப்பசி – கிருஷ்ண-பித்ருக்கள் நற்கதி பெறுவர்.
22. பாபாங்குசாப்பசி சுக்ல-கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாவங்கள் அகலும்.
23. ரமா -கார்த்திகை கிருஷ்ண-உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.
24. பிரபோதின் கார்த்திகை சுக்ல-பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.
25. கமலா-மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம். ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தையோ அல்லது ராமர் பட்டாபிஷேகத்தையோ பூஜையில் வைத்து, அவருக்கு நைவேத்தியமாக அவரவர் வசதிக்கேற்ப பழங்களையும், வடை போன்ற இன்ன பிறவற்றையும் சமர்ப்பிக்கலாம்.
துளசி மாலையும், வெற்றிலைச்சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ‘ஸ்ரீராமஜெயம்’ அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன்பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
ஓம் ஹம் ஹனுமதே நம… என்ற மந்திரத்தைச் சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும்.
கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.
ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன்-மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும். தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம்பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறு வகையான பலன்களும் நிரந்தரமாக கிடைக்கப்பெறுவர்.
அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.