Home ஆன்மீக செய்திகள் சகல காரிய சித்தி,ஐஸ்வர்யம் மற்றும் ஆன்மீக பலம் தரும் அதிசய கொம்பு தேங்காய் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சகல காரிய சித்தி,ஐஸ்வர்யம் மற்றும் ஆன்மீக பலம் தரும் அதிசய கொம்பு தேங்காய் பற்றி உங்களுக்கு தெரியுமா?

by admin

சகல காரிய சித்தி,ஐஸ்வர்யம் மற்றும் ஆன்மீக பலம் தரும் *அதிசய கொம்பு தேங்காய்* பற்றி உங்களுக்கு தெரியுமா?

உலகில் மிக எளிமையாக வழிபடக்கூடிய , எல்லோரும் எப்போதும் எக்காரியம் ஆரம்பிக்கும் முன்னும் வணங்க வேண்டிய முழுமுதற்கடவுள் விநாயகன்.

அந்த விநாயகனே , எப்போதாவது நிகழும் அரிய தெய்வீக நிகழ்வாக, கொம்பு தேங்காய் வடிவில் காட்சி தந்தால், நினைக்கவே ஆன்ம சிலிர்ப்பு ஏற்படுகின்றதல்லவா?

இந்த அற்புதப்படைப்பான கொம்பு தேங்காயை , நம் வீட்டில் தனி பூஜை அறையில் வைத்து மிக மிக சுத்தமாக முறையாக , வழிபட்டு வர எல்லாவிதத் தடைகளும் சூரியனைக்கண்ட பனித்துளிபோல உருகி ஓடிவிடும்.

அது மட்டுமா?

வீட்டில் தன தான்ய விருத்தியை உண்டுபண்ணும். மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வயது ஆகியும் கிரகக் கோளாறுகளால் தடைபட்டு வந்த திருமணம், விரைவில் கை கூடும்.

தடைபட்டத் திருமணம் விரைவில் கைகூட, இந்த முக்கண் கொம்பு தேங்காயை வீட்டில் மிக மிக சுத்தமாக தனி இடத்தில் வைத்து,48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வர, 48 நாட்களுக்குள் நல் வரன் வாயிற்கதவைத்தட்டும், அத்துடன் மனம் விரும்பிய மண வாழ்வு அமையும்.

வியாபாரம் அல்லது செய்யும் தொழில் நஷ்டத்தில் இருந்தால் இந்த முக்கண் கொம்பு தேங்காயை வியாபாரம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து 48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வந்தால் உங்கள் வியாபாரம்,செய்தொழில் மேன்மையடையும்.

கண் திருஷ்டி போன்ற வினைகளால் , குடும்ப சுபிட்சம்,வியாபார விருத்தி இழந்து வாடுபவர்கள்,
இந்த அற்புத கொம்பு தேங்காயை வணிக இடத்திலும்,வீட்டிலும் தனி இடத்தில் வைத்து நித்ய பூஜையை மன சுத்தம்,ஆன்ம சுத்தத்துடன் செய்து வர, கண் திருஷ்டி விலகி தொழில் வசியம் ஏற்பட்டு இழந்தவை யாவும் விரைவில் திரும்பும் , பொருளும்,அருளும் என்றும் தங்கும்.

இப்பட்டிபட்ட அற்புதமான கொம்பு முளைத்த தேங்காயை கனகலஷ்மி எனவும் சொல்வார்கள்.

இந்த கொம்பு தேங்காய் உங்களுக்கு அதிர்ஷ்ட வசமாக கிடைத்தால் அதை ஒரு சிகப்பு துணிப்பையில் போட்டு நன்றாக கட்டி உங்கள் வீட்டின் உட்புறம் தலைவாசலுக்கு மேல் மாட்டிவைக்கவும்.

இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட்டு,100வருடம் உங்கள் வீட்டில் மஹாலெஷ்மி வசிப்பாள்.

இப்பட்டிபட்ட அற்புதமான கொம்பு முளைத்த தேங்காயை நீங்கள் பார்க்க வேண்டுமா?

தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த நவ கைலாய
தலங்களில் ஒன்றான தென் திருப்பேரை கைலாய நாதர் ஆலயத்தின் அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று உள்ளது.

ஆங்கிலேயே கலெக்டராக இருந்த கேப்டன் துரை , ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது சாவடியில் இளைப்பாரிய அவர் பக்கத்திலிருந்த ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று ஒரு இளநீர் கேட்டுள்ளார்.

அங்கிருந்த விவசாயி, இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாச நாதரின் அபிசேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால், இந்த இளநீர்கள் குடிப்பதற்கு தர இயலாது, என்று கூறியுள்ளார்..

இதை அறிந்த கேப்டன் துரை, விவசாயிடம்,இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைத்திரு்க்கிறது, சும்மா பறித்து போடு, என்றாராம்.

விவசாயியும் இதனை மறுக்க முடியாமல், இளநீர் பறித்துப்போட்டாராம்.

ஆனால் அந்த இளநீர் மூன்று கொம்புகள் முளைத்த தேங்காயாக மாறியுள்ளதை பார்த்த அந்த ஆங்கிலேய துரை அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே கைலாச நாதரின்
கோவிலுக்கு சென்று தன் தவறுக்கு வணங்கி, மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, தினசரி பூசைக்காக,26 சல்லிக்காசுகள் வழங்கியதாக வரலாறு சொல்கிறது,

அந்த கொம்பு முளைத்த தேங்காய் இன்றும் அம்மன் சன்னதியில் பாதுகாக்கபட்டு வருகிறது.

தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்துள்ள தென் திருப்பேரை கைலாய நாதர் ஆலயத்தின் சிறப்பு:

இது தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்துள்ள தலமாகும்.

அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் விட அதில் 7 வதாக தாமரை மலர் ஒதுங்கிய இடமே தென் திருப்பேரை கைலாசநாதர் ஆலயமாகும்.

மூலவர் ; கைலாச நாதர்

அம்பாள் ; பொன்னம்மை

அமைவிடம் (ஊர்) ; தென்திருப்பேரை,
திருநெல்வேலி மாவட்டம்.
(ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

இது நவ கைலாய தலங்களில் புதன் ஆட்சி பெற்ற 7வது புண்ணியதலமாக கருதப்படுகிறது.

இங்குள்ள பைரவர் ஆறு கைகளுடனும், தனது வாகனமான நாய் இல்லாமலும் காட்சி தருகிறார்.

இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன், ஆகிய நால்வரும், குதிரை வாகனத்தி்ல் எழுந்தருளியுள்ளனர்.

இது ஒரு எங்கும் காணக்கிடைக்காத சிறப்பு அம்சமாகும்.

மேலும், குரு, சுக்கிரன் 8 குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரிலும் , சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சி அருள்கின்றனர்.

இம்மாதிரியான வித்தியாசமான அமைப்பபு வேறு எந்த தலங்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புவர்கள் இத்தலத்தில் பச்சை வஸ்திரம் சாத்தி புதன் அனுக்கிரக பிரத்தனையை மேற்கொண்டால் மிக்க பலன் பெறுவர்.

நவதிருப்பதியில் சுக்கிரனுக்கு உரிய பெருமாள் கோவிலும்,நவ கைலாய கோவில்களில் புதனுக்குரிய கோவிலும் இந்த தென்திருப்பேரை ஊரில் அமைந்திருப்பதால் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் கிட்டும்.

இக்கோவிலில் வல்லப கணபதி, கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் ஆகிய மூன்று விநாயகர்கள் தனித்தனியான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயத்தின் அம்பாள் சன்னதியில் உள்ள கொம்பு முளைத்த தேங்காய் மற்றும் கனகலெஷ்மி தேங்காய் எனப்படும் கொம்பு தேங்காய் ஆகியவற்றின் படங்கள் கீழே! 👇👇

You may also like

Translate »