Home ஆன்மீக செய்திகள் ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்

by admin
GajaLakshmi-Stotram_ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.

தியான சுலோகம்:-

சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச

         வராபய கராந் விதாம்

அப்ஜத்வய கராம்போஜாம்

         அம்புஜாசநஸமஸ்த்திதாம்

ஸஸிவர்ண கடேபாப் யாம்

         ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்

சர்வாபரண சோபாட்யாம்

         சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்

சாமரக்ரஹ நாரீபி :

         ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :

ஆபாதலம்பி வசநாம்

         கரண்ட மகுடாம் பஜே.

பலன்கள்:-

மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.

You may also like

Translate »