பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக, திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ‘ஏழு’ என்ற எண்ணிக்கையில் அமைந்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
‘பெரிய’ பெருமை
* பெரிய கோவில்
* பெரிய பெருமாள்
* பெரிய பிராட்டியார்
* பெரிய கருடன்
* பெரிய வசரம்
(நைவேத்தியம்)
* பெரிய திருமதில்
* பெரிய கோபுரம்
நாச்சியார்கள்
* ஸ்ரீதேவி
* பூதேவி
* துலுக்க நாச்சியார்
* சேரகுலவல்லி நாச்சியார்
* கமலவல்லி நாச்சியார்
* கோதை நாச்சியார்
* ரெங்கநாச்சியார்
பிரகாரங்கள்
* பூலோகம் – மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று
* புவர்லோகம் – திரிவிக்ரம சோழன் திருச்சுற்று
* சுவர்லோகம் – கிளிச்சோழன் திருச்சுற்று
* மஹர்லோகம் – திருமங்கை மன்னன் திருச்சுற்று
* ஜநோலோகம் – குலசேகரன் திருச்சுற்று
* தபோலோகம் – ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று
* சத்யலோகம் – தர்மவர்ம சோழன் திருச்சுற்று
ஆழ்வார்கள் சன்னிதி
திருமாலைப் பற்றி பாடல்களைப் பாடி அருளியுள்ள பன்னிரண்டு ஆழ்வார்களும், திருவரங்கம் ஆலயத்தில் 7 சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.
* பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
* நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
* குலசேகர ஆழ்வார் * திருப்பாணாழ்வார்
* தொண்டரடிப்பொடி ஆழ்வார் * திருமழிசை ஆழ்வார்
* பெரியாழ்வார், ஆண்டாள்
தங்க குதிரை வாகனம்
திருவரங்கம் கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஆண்டுக்கு 7 முறை மட்டுமே, தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்..
* விருப்பன் திருநாள்
* வசந்த உற்சவம்
* விஜயதசமி
* வேடுபறி
* பூபதி திருநாள்
* பாரிவேட்டை
* ஆதி பிரம்மோற்சவம்
தாயார் உற்சவம்
* கோடை உற்சவம்
* வசந்த உற்சவம்
* ஜேஷ்டாபிஷேகம்
* நவராத்திரி
* ஊஞ்சல் உற்சவம்
* அத்யயன உற்சவம்
* பங்குனி உத்திரம்
தென்திசை கோபுரங்கள்
* நாழிகாட்டான் கோபுரம்
* ஆர்யபடால் கோபுரம்
* கார்த்திகை கோபுரம்
* ரங்கா ரங்கா கோபுரம்
* தெற்கு கட்டை கோபுரம்
* தெற்கு கட்டை கோபுரம்-2
* தெற்கு ராஜகோபுரம்