பவளம் இதனைஆங்கிலத்தில் கோரல் என்று அழைப்பார்கள்.
*9 -என்ற எண்ணுக்குரிய அதிர்ஷ்டக் கல்*
எண்கணித படி எண்—9க்குரிய அதிர்ஷ்டக் கற்கள் 9 -என்ற எண்ணுக்குரிய அதிர்ஷ்டக் கல்லாக்க கருதப்படுவது பவளம் ஆகும். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இதனைக் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் செவ்வாயால் ஆதிக்கம் செலுத்தப்படுபவர்கள்ஆவார்கள்.
*9-என்ற எண்காரர்கள் அணிந்தால்* அவர்களுக்கு கீழ் வரும் நன்மைகள் உண்டாகின்றன. எவ்வித நோய்களும் தாக்கப்படாது. ஆரோக்கியமாக வாழ்வார்கள். எல்லாவித பாக்கியங்களையும்செல்வவளங்களையும் இவர்கள் அடைவார்கள்.
செவ்வாய்க்குரிய அதிர்ஷ்டக்கல் பவளம் எனவே இவர்கள் தங்கள் அதிர்ஷ்டக் கல்லாகப் பவளத்தை யே உபயோகிக்க வேண்டும்.
*பவளத்தின் வகைகள்*
நற்பவளம், வெள்ளைப்பவளம், கரும்பவளம், செம்பவளம், ஊதாபவளம் என்று பலவித வண்ணங்களாகப் பிரிகின்றன.
*தரமான பவளம்* –
பவளத்தின் நிறம் சிவப்பு நல்ல சிவப்பாகவும் உருண்டும் இருக்கும். பவளம் தரமான பவளம் என்று மதிக்கப்படுகிறது. நல்லபவளத்தின் தன்மை பளபளவென்று பிரகாசிக்கக் கூடிய ஆற்றல் இல்லாது இருக்கும். கண்ணால் பார்க்கும் போதேரப்பசையுடன் இருப்பதைப் போலத் தோன்றும். பவளத்தின் நிறம் கோவைப் பழத்தைப் போன்று இருக்க வேண்டும். உருண்டு திரண்டு எவ்வித மேடு பள்ளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். வட்டமாக இருக்கக் கூடாது. பவளத்தின் மேல் எந்தவிதக் காயங்களும் இருக்கக் கூடாது.
*தரமில்லாத பவளம் *
வெளிப்பார்வைக்கு நன்கு அமைந்து உள்ளே துவாரம் இருக்கக்கூடாது. வளைவுகள் உள்ள பவளம் குற்றமான பவளமாகும் அரித்த பவளமும் இலாயக்கற்றது. குற்றமில்லாப் பவளத்தை அணிபவர்களுக்கு உண்டாகும் நன்மைகள் குற்றமில்லாப் தேர்ந்தெடுத்து
*பவளம் அணிந்தால் நீங்கும் நோய்கள்*
ஆரோக்கியமாக வாழ்வார்கள். எல்லாவித பாக்கியங்க ளையும்செல்வவளங்களையும் இவர்கள் அடைவார்கள். உடலில் உண்டாகும் வியாதிகள் உஷ்ண வியாதிகள் பறந்து போகும். தீரும் நோய்கள் பவளத்தை சித்த வைத்திய முறைப்படி பஸ்பம் செய்து உண்ணுபவர்களுக்கு விக்கல் விலகும் வாதம் அகலும், இரத்த பித்ததீரும், சுவாசகாசம் குணமாகும், இரத்தசூலை குணமடையும். ஜீரண சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
*மேஷ,விருட்சிக ராசி*
மேஷ,விருட்சிக ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். மேலும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நம் கோபத்தைக் குறைத்து மனநிம்மதியைத் தரும்.. மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும்.
*பவளத்தின் இதர பெயர்கள்*
பிங்கல முனிவர் பவளத்தின் வேறு பெயர்களாக துப்பு, பிரவாளம், துவர், துகிர், வித்துருமம், அர்த்தம் எனப் பல பெயர்களைத் தருகிறார்.
*ரஸ ஜல நிதி தரும் பவளத்தின் பயன்கள்*
பவளம் உடலை உருக்குகின்ற க்ஷய ரோகத்தைத் தீர்க்கும்.
இரத்தப் போக்கைப் போக்கும்.
இருமலைத் தீர்க்கும்.
கண் வியாதிகளைப் போக்கும்.
விஷத்தை முறிக்கும்.
தீய திருஷ்டியாலும் பிசாசு போன்ற தீய சக்திகளினால் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
இது இலேசானது. ஜீரணத்தை அதிகரிக்கும்.
இவையே ரஸ ஜல நிதி தரும் அற்புதத் தகவல்கள்.
*ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து திருமணம் தாமதம் ஏற்பட்டால் ?*
பெண்களுக்கு திருமண சமயத்தில் செவ்வாய் கிரஹத்தால் தீமைகள் அகல , தாலிக்கொடியில் பவளம் மற்றும் சங்கு பொருந்திய தாலிக்கொடியை சேர்ப்பார்கள். இதனால் , ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் , பவளம் பெண்களுடைய தாலி கொடியில் இருக்கும் பவளம் அவர்களின் திருமண வாழ்வில் எந்த சிக்கலும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே , செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்கள் பவளம் அணிய வேண்டும். இதனால் திருமணம் தடை விலகி வெகு விரைவில் திருமண வாழ்வு அமைகிறது.
*ஏன் எங்களிடம் வாங்க வேண்டும் ?*
உண்மையான பவளம் மோதிரம் அணிந்தால் தான் செவ்வாய் பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் . எங்களிடம் தரச்சான்று பட்டயத்துடன் கூடிய தரமான பவளஅதிர்ஷ்ட கல் அல்லது மோதிரம் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ மோதிரமாக செய்து உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும் . பவள மோதிரம் ஆர்டர் செய்தால் உங்களுக்கு கூரியர் மூலம் அல்லது நேரிலோநவகிரஹ ங்களின் மந்திரங்களை சொல்லி பூஜையில் வைத்து உங்களுக்கு இந்த நவரத்தின அதிர்ஷ்ட மோதிரமாக தரப்படும.