சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.
சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.
சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
பாதங்கள் சக்கரத்ததைப்போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்.
சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6, 12, 24, 48 என்று வலம் வருதல் நலம்.
சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாளையென்பது
நரசிம்மருக்கு
கிடையாது என்பர்.
துன்பத்திலிருந்து
விடுபட்டு உடனடியாக
நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும்
ஒரு சேர வழிபடுவது
மிகச் சிறப்பு.
இதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.
ஓம் நமோ நாராயணா….!