Home ஆன்மீக செய்திகள் அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூரில் உள்ள ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூரில் உள்ள ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

by admin
ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்-அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூரில் உள்ள ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது

அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூரில் உள்ள ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 10 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல கோயம்புத்தூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*

5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம்.

இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. விநாயகரை எடுத்து வரும் வழியில் வண்டியின் அச்சு முறிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*

இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் 2 நாள் திருவிழா, சித்திரை 2 நாள் திருவிழா, மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, தமிழ் வருடபிறப்பு, ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல், தைப்பூசம், கார்த்திகை தீபம் போன்றவை கொண்டாடப்படுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?*

விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியங்களில் தடங்கல் நீங்கும்.

தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*

சிதறு தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் செய்தல் முதலிய நேர்த்திக்கடன்கள் செலுத்துகிறார்கள்.

சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.

You may also like

Translate »