Home ஆன்மீக செய்திகள் கார்த்திகை மாத பவுர்ணமி: சிவபெருமான விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

கார்த்திகை மாத பவுர்ணமி: சிவபெருமான விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

by admin
Karthigai-Deepam-Pournami-Viratham_கார்த்திகை மாத பவுர்ணமி சிவபெருமான விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

பவுர்ணமி, அமாவாசை திதிகள் இறை வழிபாடு முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. முழு நிலவு நாளில் ஆலயங்களில் அற்புத திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை பவுர்ணமி தொடங்கி பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல விஷேசங்கள் நடைபெறுகின்றன.

கார்த்திகை மாத பவுர்ணமி நாளான இன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமியான இன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

இன்றைய தினம் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் சிறப்பானதாக கொண்டாடப்பபடுகிறது. கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை, திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.

You may also like

Translate »