Home ஆன்மீக செய்திகள் கார்த்திகை தீபமான இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கார்த்திகை தீபமான இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

by admin
Karthigai-Deepam-slokas_கார்த்திகை தீபமான இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கார்த்திகை தீபத்திருநாளான இன்று சிவ வழிபாடு செய்வோம். இன்று இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அப்போது விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

தீபம் ஜோதி பரப்பிரம்மம்

 தீபம் சர்வ தமோபஹம்

தீபனே சாத்யத சர்வம்

சந்த்யா தீப நமோஸ்துதே!

இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை எனச் சொல்லலாம். கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். சிவபார்வதியை தம்பதி சமேதராக வணங்குங்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீடு மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.

You may also like

Translate »