மனைவி மக்களுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிக்கிறார்கள். இறைவனைக் காண்பதற்காக யார் அழுகிறார்கள். சொல்.
இறைநமத்தை சொல்வதால் மனிதனுடைய மனம், உடல் எல்லாம் பரிசுத்தமடைகின்றன. நான் பாவி, பாவி என்று நினைத்துக்கொண்டிருப்பவன் பாவியாகவே மாறிவிடுகிறான். நான் இறைவனின் திருநாமத்தை சொல்கிறேன். அந்த நாம மகிமையால் என் பாவங்கள் எல்லாம் போய்விட்டன என்று உறுதியாக நினைப்பவன் முக்தனாகிறான்.
🌿🌿🌿
சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
…..
24.சண்டையிடுவதிலும் குறை சொல்லிக்கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துகொண்டு தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாகவந்து சேரும்.
25.தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலுங்கூட இடம் கிடைக்காது.
26.பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நீனைவில் வைத்துக் கொண்டால் , தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
.
🌿🌿🌿
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
பயணத்தில் உதவும் நண்பன் நாம் கற்கும் கல்வி, வீட்டில் உள்ள பொது உதவும் நண்பன் நம் மனைவி, இறந்த பின்பு உதவும் நண்பன் நாம் செய்யும் இறை தொண்டு.
🌿🌿🌿
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
.
‘கணவனின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.
யாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் ‘வாழ்க’ என்பார்கள்.
தும்மினேனாக வழுத்தினாள்” என்றான் வள்ளுவன்.
தும்மும் போது சிலர் ‘நூறு வயது’ என்பார்கள்.
எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.
‘நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள். தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, ‘அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். ‘வளர்த்து விடு’என்பார்கள்.
பெண் ருதுவாவதைப் ‘பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.
“காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம் , ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.
இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.
🌿🌿🌿
திரிகடுகம்
🌿🌿🌿
வன்சொல்லை இனிய சொல்லாக கொள்கின்றவனும், நெய் ஊற்றிய சோறு எனக் கூழை மதிக்கின்றவனும், கைக்கின்ற (பழைய, சுவையற்ற) உணவை உண்கின்றவனும் மெய்ப்பொருள் கண்டு வாழ்பவர் ஆவார்.
🌿🌿🌿
கதை
..
தற்காலிக விருந்தினர்!!!
..
டோசுய் என்பவர் ஒரு ஜென் மாஸ்டர். அவர் புத்த சமய நெறிகளைக் கடைபிடிப்பதை விட்டு, ஒரு பாலத்தின் கீழ் பிச்சைக்காரர்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது டோசுய்வின் முதுமை காலத்தில், அவரது மீதமுள்ள வாழ்கையை கழிக்க, அவரது நண்பர் ஒருவர் அவருக்கு அரிசியிலிருந்து வினிகர் தயாரிப்பதைக் கற்றுக் கொடுத்தார். அதனை டோசுய் தனது மரணம் வரை தொடர்ந்து செய்தார்.
ஒரு முறை டோசுய் வினிகரை செய்து கொண்டிருக்கும் போது, தனது பிச்சைக்கார நண்பர்களில் ஒருவர், புத்தரின் படம் ஒன்றை அவருக்குக் கொடுத்தார். டோசுயும் மதப் பிணைப்புகளுக்கு, அப்பாற்பட்டு இருந்ததால், அந்த படத்தை வியப்புடன் ஏற்றுக்கொண்டார்.
பின் அந்த படத்தை தனது குடிசையின் சுவரில் தொங்கவிட்டு, மேலும் அதில் ஒரு வாசகம் ஒன்றையும் எழுதினார். அது என்னவென்றால், “திரு. அமிதா புத்தர்: இது குறுகிய அறை என்பதால், நான் மட்டும் தான் இங்கு தங்க முடியும். நீங்கள் ஒரு தற்காலிக விருந்தினர். நீங்கள் உங்கள் அழகான மாளிகையில் மறுபடியும் பிறந்து அங்கே தங்குங்கள். இதற்காக என்னை தவறாக எண்ண வேண்டாம்.” என்று எழுதி இருந்தார்.
இக்கதையில் டோசுய்-க்கு புத்தரைப் பற்றி நன்கு தெரியும். அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதும் தெரியும். இருப்பினும், நண்பர் கொடுத்த காரணத்தினால், அவரை தன் அறையில் வைக்க கஷ்டப்பட்டு, அவ்வாறு எழுதியுள்ளார். இதனால் டோசுய்க்கும் கஷ்டம், புத்தருக்கும் கஷ்டம். ஆகவே “யாரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து விட்டால், எல்லாம் சௌக்கியமே” என்று கருடன் சொன்னது எல்லோருக்கும் பொருந்தும்.
..
உண்மை மீண்டும் உருபெற்றது!!!
.
ரியோகன் என்பவர் ஒரு பெரிய பணக்காரர். அவரிடம் ஒரு பெரிய எஸ்ட்டேட் ஒன்று இருக்கிறது. ஆனால் அவர் ஜென் துறவறத்தில் ஈடுபட விரும்பினார். அதனால் அவர் தன் குடும்பத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை, அவரது மருமகனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால் அவரது மருமகனோ பணத்தினை செலவழிப்பதில் சிறந்தவன். அவனது செயல்களைக் கண்டு அவனது குடும்பத்தினரும், எஸ்டேட்டில் வேலை செய்பவர்களும் பயந்தனர்.
ஆகவே அவர்கள் ரியோகனை கண்டு, அவரிடம் அவனைப் பற்றி குறை கூறினர். ரியோகனும், மருமகனைக் கண்டு பல வருடங்கள் ஆனதால், அவனைக் காணச் சென்றார். அவரது மருமகனும் மாமாவைக் கண்ட சந்தோஷத்தில், அவரை அன்று இரவு முழுவதும் தன்னுடன் தங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
ரியோகனும் ஒப்புக் கொண்டு, அன்று இரவு முழுவதும் தியானம் செய்து கொண்டே இருந்தார். விடிந்ததும் ரியோகன், தியானத்தை களைத்து புறப்படத் தயாரானார்.
அவர் புறப்படும் போது, தனது மருமகனிடம் “தனக்கு வயசாகிவிட்டது என்றும், என் கைகள் நடுங்குகிறது, தன் வைக்கோல் செருப்புகளை எடுத்து தருமாறு கேட்டார்”. மருமகனும் அவனுடைய மாமாவின் விருப்பத்திற்கேற்ப, அவருடைய செருப்பை எடுத்து கொடுத்து உதவினார்.
பின் ரியோகன் அவனுக்கு நன்றி கூறி “மனித உடல் மிகவும் அற்பமானது. அது நாளுக்கு நாள் வேகமாக முதுமை அடைகிறது. நீ உன்னை பார்த்துக்கொள்” என்று சொல்லிச் சென்றார். ஆனால் அவர், உறவினர்கள் அவன் நடவடிக்கைகளைப் பற்றி புகார் செய்ததை பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து சென்றார். உண்மையை அறிந்த அவன் அன்று முதல் ஒரு புதியவனாக மாறினான்..
🌸 🌸 🌸..
மனு தர்ம சாஸ்திரம்
🌸 🌸 🌸
ஒருவனுக்கு அவன் தமையனின் மனைவி, குரு பத்தினிக்கு சமமானவள். தம்பியின் மனைவி மருமகளுக்கு ( தன் மகனை மணந்து வந்த பெண்) சமம் என்று பெரியோர் கூறுவர்.