———————————————————
இந்த பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பால் தோன்றியது. அது ஒரு எதேச்சையான செயல் என்றும், வெடிப்பில் உருவான அண்ட சராசரங்களையும் இயக்கும் மிக பெரிய ஆற்றல் ஒருமையப்புள்ளியாக இருந்து பல்லாயிர கணக்கான பால்வெளி அண்டங்களை இயக்கிக்கொண்டுள்ளது என இன்றைய அறிவியல் சொன்னாலும்
அந்த அறிவியலை நமக்குள் அடக்கி அது ஒரு பிரமாண்டமான சக்தி என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்களின் உடலை (ககன மார்க்கமாக) அஷ்டமா சித்துவில் ஒரு சித்துவான லகிமா சித்துவைக்கொண்டு ஆகாய மார்க்கமாக கடந்து இந்த விண்வெளியை சித்தர்கள் ஆராய்ந்துளர்கள் என்பதற்கு சான்றாக செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் தான் இருக்கும் என்பதை எப்படி கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார்கள்..?
ஆக இது மட்டும் அல்ல, அன்றே ஏழு கிரகத்தின் தன்மைகளும் அதன் புறஊதா கதிர்களின் நிறங்களும் ஆராய்ந்து அதில் எந்ததெந்த கிரகத்தின் கதிர் வீச்சுகள் எந்த எந்த நாளில் நாம் வாழும் இந்த பூமியை முழுமையாக ஆக்கிரமிக்கிறது, அதில் எந்தெந்த கிரகத்தால் மனிதனின் மூளை எப்படி எப்படியெல்லாம் மாற்றத்தை அடைகிறது என்பதையெல்லாம் சித்த பெருமக்களால் ஆராய்ந்து சொல்ல முடிந்தது.?
குறிப்பாக ஜோதிடம், மாந்திரீகம், ஆன்மீகம். அதிலும் ஜோதிடத்தில் இந்த கிரகங்களோடு இரண்டு நிழல் கிரகங்கள் ராகு -கேது சேர்த்து ஒன்பது கிரகமா பாவித்து அதன் அசைவுகளை ஒளிகளையும் கொண்டு மனிதனின் புத்தியால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை துல்லியமாக கணிக்க முடிந்தது அன்றைய ஜோதிட சாஸ்திரத்தில்….
ஆனால் அதே கிரகங்களை வைத்து வேறு ஒரு கோணத்தில் அதாவது கிரக அசைவு மற்றும் ஒளி இவைகளை வைத்து ஜோதிடம் கணிப்பதை போல, கிரகத்தின் வேகத்தையும் அதன் ஒலி அதிர்வலைகளையும் வைத்து ஆன்மீக அடிப்படை தத்துவத்தை தீர்மானித்துள்ளார்கள்.
இந்த இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை கல்வி அறிவு இல்லாத மக்கள் உணர்வதில்லை. ஆகையால் கிரகங்களின் ஆக்கிரமிப்பு நாட்களை அந்தந்த நாட்களில் அந்தந்த கிரகம் சார்ந்த அதிர்வலைகளுக்கு ஒவ்வொரு உருவகத்தை உருவாக்கி அதை ஆன்மீக வழியில் உண்மை தெரிந்துகொள்ளாமலே வழிபடுகிறார்கள்.
அதாவது புராணங்கள் சொல்லும் பார்வை ஒரு தனி பட்ட பார்வை அதை பற்றி எழுத விரும்பவில்லை. புராணம் சொல்லும் கதையை பார்த்து விட்டு மீண்டும் சப்த கன்னிகளின் அபூர்வ இரகசியத்தை இன்று தெரிந்துகொள்வோம்
பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வாரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் “சண்டர்-முண்டர்” எனும் இரு அரக்கர்கள். பெண் என்றால் அவர்களுக்கு அத்தனை இளக்காரம் போல…. ஒரு பெண்ணா நம்மை கொல்லப் போகிறாள் என்ற தைரியத்தில் அவர்கள் எல்லோரையும் கொடுமை செய்தார்கள். அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், அன்னை ஆதிபராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள்.
சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக ஏழு கன்னியர்களை உருவாக்கி அசுரக் கூட்டத்தை அழித்தனர். அன்று முதல் இந்த சப்த மாதாக்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்து வருகின்றன.
ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன.
சப்தகன்னியரின் சிறப்புகள்
—————————————————
இங்கே கருவில் தோன்றாத பெண் என்பது பிரபஞ்சம் தோன்ற காரணமாக இருந்த பெரும் வெடிப்புக்கான இயற்கை சக்தி என்பது. அது முன்னொரு காலத்தில் நடந்தது என்ற பொருளில் ஆதிசக்தி என்றும், பிரபஞ்சம் என்பது எல்லையற்று நீண்டு சென்றுக்கொண்டே இருப்பதால் அதன் மாயையை பிரம்மம் என்றும், பரந்து கிடைப்பதால் அதுவே பரப்பிரம்மம் என்றும்
பெண் பாலில் ஆதிபராசக்தி என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆதிபராசக்தி என்பது நீங்கள் நினைப்பதை போல ஒரு பெண் அல்ல. அது ஆதிதொட்டு இயங்கிக்கொண்டுருக்கும் பேரியக்கம் என்பது தான் அதன் பொருள். அதனுள் உருவானதே சப்த கிரகங்கள் அதாவது 7கிரகங்கள். பொதுவாக ஆதி தமிழர்கள் இயற்கையை பெண்மையாகவே போற்றும் குணங்களை கொண்டவர்கள் என்பது இந்த மண்ணின் மரபு.
சப்த கன்னிகள் என்றால் ஏழு கன்னிகள் என்று பொருள் படுகிறது. சப்த-என்றால் ஏழு சப்தம் என்றால் ஒலி. இங்கே சப்த கன்னியர் என்று பெயர் வர காரணம் என்னவாக இருக்கும்…?
ஒரு நுண்ணொலியை நம்மால் நேரடியாக காதால் கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டுமானால் அதற்கென்று தனி பிரித்தியோகமான ஒரு கருவி வேண்டும் அல்லவா..?
உதாரணமாக, இப்போ எங்கேயோ இருக்கும் ஒரு இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலி அலைகளை வேறு ஒரு இடத்தில் இருக்கும் நம்மால் அதை தெளிவாக கேட்க வேண்டுயென்றால், ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ மூலம் மட்டுமே அதன் பண்பலையை கொண்டு தெளிவாக கேட்க முடியும். அந்த ட்ரான்ஸிஸ்டர் கருவி இல்லையென்றால் நம்மால் கேட்க முடியாது அல்லவா..?
அதேப்போல தான் கிரகங்களில் நுண்ணொலிகளை நம்மால் நேரடியாக கேட்க முடியாது. அவைகளை யோகத்தின் மூலமாக மட்டுமே உணர்ந்து கேட்க முடியும். அப்படி உணரும் ஒலிக்கு பெயர் தான் கன்னி.
அதாவது எப்படி ஒரு குழந்தை பிறந்நது அதற்கு 12வயது வரை தான் சொந்த பாலினத்தை ஆர்மோன் சுரப்பி உதவி இல்லாமல் ஆணா/பெண்ணா என்பதை உணரமுடியாமல் கன்னி தன்மையோடு இருக்கின்றதோ அதேபோல்
இந்த கிரகங்களின் சப்தத்தை யோகத்தின் மூலம் நாம் அறியாத வரை அந்த நுண்ணொலிகள் கன்னிகள் என்று கருத்த படுகிறது.
ஆதியில் சப்த கன்னிகள் கண்டறிய பட்டு அவைகளை சிவன் கோவில்களில், மற்றும் ஏரி, குளங்கள் போன்ற இடங்களில் ஒரே கல்லில் ஏழு பெண் சிலைகளாக வடிவமைத்து வைத்தார்கள். இதான் நோக்கம் மக்கள் தாகம் கொண்டு வரும் போது தண்ணீர் அருந்தி தாகம் தீர்ப்பதை போல், இந்த சப்த கன்னியர்களை பற்றிய தாகத்தோடு தேடலை தொடங்க வேண்டும் என்பதை சூட்சகமாய் கூட நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கலாம்.
எது எப்படியோ ஒருவழியாய் என் மூலமாக தான் இன்று சித்தர்களின் குரல் வழியாக அந்த சூட்சமம் உடைகிறது என்பதில் மகிழ்ச்சி தான்.
பொதுவாக சப்த கன்னிகள் ஆசீவகட்டமைப்புக்கு உட்பட்ட தெய்வங்கள் என்பதை அந்த ஏழு கன்னியர்களும் கையில் தாமரை மொட்டை பிடித்த படி இருக்கும் காட்சிகள் தான் சாட்சி.
ஆசிவகத்தின் அடையாளம் தாமரை.
(Bjp கட்சியின் தாமரை என்று தவறாக பொருள் கொள்ள வேண்டாம்)
அந்த தாமரை வேறு இந்த தாமரை வேறு,
அதாவது அது ஆசிவகத்திலிருந்து அபகரிக்கப்பட்ட தாமரை (இந்து தாமரை)
ஆசீவக தாமரை என்பது தத்துவார்த்த தாமரை
ஆகையால் அதை இங்கே சேர்க்க தேவை அல்ல.
கல்வி கற்றத் தமிழ் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2 அல்லது 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார் (புறம்-47). குருக்குலக் கல்வியை ஆதியில் தொடங்கியவர் சிவ சித்தர்கள். அதனால் அவர் ஆதிகுரு (சிவன்) என்றழைக்கப்படுகிறார். அதன்பின் நமது முன்னோர்களான 18 சித்தர்கள் குருகுலக் கல்வி பயின்றவர்கள். அங்கே இருந்த சித்தர்கள் மாணவர்களுக்கு அனைத்து வகையான கலைகளையும் கற்றுத்தந்தனர்.
இந்த யோக கலைகளின் பிறப்பிடமான தமிழ்நாட்டில், பல ஊர்களின் பரவி இருந்த காலத்திலும், இன்றைய ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் பல ஊர்களின் பெயர்கள் பள்ளி என முடியும். வானியல், இசை, இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், மாந்திரீகம், வானியல் கணிதம், போர் உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன. பொதுவாக அன்று கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தமிழகம், சிங்களதேசம் என ஐந்தும் பொதுவாக தென்னிந்தியா தான்.
ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள குருகுல வாழ்வியல் முறையில், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பர். குருகுல கல்வியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு.
குருகுலக்காலம் என்பது மொத்தம் 18 ஆண்டுகள். 6 ஆம் அகவை முதல் 24 ஆம்
அகவை வரை அனைத்துக் கலைகளும் கற்றுத் தரப்படும். இதற்குப் பிறகு ஒரு இளைஞனானவன் அவனுக்குப் பிடித்த தொழிலை செய்யமுடியும். பெற்றோரின் தொழில் அவன் மீது ஒரு போதும் திணிக்கப்பட்டது கிடையாது!!!! இது தான் உண்மையான தமிழர் கல்வி முறை.
ஒரு மாணவன் அனைத்து கலைகளையும்
கற்றுக்கொண்ட பிறகு அவனுக்கு கை வந்த கலையை மட்டும் தேர்ந்தெடுத்து தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.
கல்வி கற்கும் இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மாணவர்களை அவர்களது மூளை வளர்ச்சிக்கும், திறமைக்கும் ஏற்றாற்போல் வகைப்படுத்த குருகுல சித்தர்கள் கொண்டு வந்த முறையே வர்ணப் படிநிலை. அந்த வர்ண படிநிலைகளை எப்படி தீர்மானித்தார்கள்?
வாழ்வியல் முறை கல்வியில் பண்டைய கால தமிழர்கள் ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் தன்மை, தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ளவர்களுக்கு சொல்லிக்கொடுப்பர்.
அந்த ஏழு நிறங்கள் என்னென்ன….?
1.கருப்பு,
2.நீலம்,
3.பச்சை,
4.சிவப்பு,
5.பொன்மஞ்சள்,
6.வெள்ளை
மற்றும் எழாவதாக நீர்வண்ணம் (நிர்வாணா)
ஆதி வழிவந்த சித்தர்கள் நடத்திய குருகுலத்தில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது. ஒரு மனிதனின் மூளைவளர்ச்சியை இந்த நிறங்கள் குறிக்கின்றன.
அதாவது நாம் இன்று பேசும் மனுவின் (மனுதர்ம) வர்ணாசிரமம் என்பது பின்காலங்களில் தோன்றியது.
ஆனால் சித்தர்களின் வர்ணாசிரமம் என்பதே ஆதிகாலத்தில் தோன்றியது. அன்று சாதி, மதங்கள் இல்லை. ஓரிரு சமய கோட்பாடுகள் மட்டுமே இருந்தது.
அதில் குருகுலக் கல்வி சொல்லித்தரப்படும் இடம் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஆசிரமத்தில் பின்பற்றப்பட்ட வர்ணப் படிநிலை தான் வர்ணாசிரமமுறை.(வர்ணம்+ஆசிரமம்=வர்ணாசிரமம்)
அதாவது ஆரியம் கட்டமைத்த வருணாசிரம கோட்பாடுகள் அல்ல. சாதி மதங்கள் அல்லாத மனித வாழ்வியல் கல்வி முறைக்கான ஆறு நிறங்களை கொண்ட கோட்பாடு. இது அது வேற இது வேற.
சூரியன் உதிக்கும் முன்பு இருள் சூழ்ந்து இருக்கும் அல்லவா.? அந்த இருள் எனும் மாயையை ஒளி எனும் ஞானம் கொண்டு விலக்கவேண்டும் என்ற பொருளில் இந்த வர்ணாசிரமபடிநிலைகள் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் நன்கு வர்ணமாக சகுனித்தனமாடி வருகிறது.
சரி அதை விடுங்கள் நம் சித்தர்களின் வாழ்வியல் கல்வி படிநிலைகளை மட்டும்
பார்ப்போம்….
ஒரு சூரிய உதயத்தின் முன்பு நடு இரவில் இருள் வானம் கருமையாக இருக்கும், பிறகு ஒளிக்கதிர்கள் மேல் எழுந்து வரத்தொடங்கும் பொழுது வானில் கருநீல நிறம் தெரியும். அடுத்ததாக தரையின் மேல் உள்ள பச்சைநிறம் நமது கண்களுக்குத் தெரியும். அதன்பிறகு சிவப்பு நிறப் பந்து போல சூரியன் மேல் எழும்பும். சிறிது நேரம் கழித்து பொன்மஞ்சள் நிறத்தில் மின்னும். பிறகு சூரியன் மேல் எழுந்தவுடன் வெள்ளைநிற ஒளி நமது வளிமண்டலத்தை நிரப்பியிருக்கும்.
இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி இந்த நிறங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இயற்கையைக் கண்ட மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என முடிவு செய்து இதுபோன்ற வரிசையைத் தேர்ந்தெடுத்தான் அவன் தான் பண்டைய கால தமிழ் சித்தன் (தமிழ்பார்ப்பான்)
பார்ப்பனன் என்றால் ஆதி சித்தர்களின் இயற்கையை நகர்வுகளை பார்த்து அதன் உண்மைகளை நமக்கு வழங்கிய மஹான்கள்.
இயற்கை அசைவுகளை பார்ப்பான் அதை நமக்கு போதையாக கொண்டு வந்து சேர்ப்பான் அவனே “பார்ப்பான்”
இங்கே சித்தர்களின் வர்ணாசிரம படி நிலை என்பது, குருகுலத்தில் ஒரு இளம்பருவ மாணவன் உள்நுழையும் பொழுது அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… ஆதலால் இருள் சூழ்ந்த இந்த நிலைக்கு ஏற்றாற்போல் அந்த மாணவனுக்கு கரிய (கருப்பு) நிற சீருடை அளிக்கப்பட்டது.
உதாரணமாக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு பதினெட்டு படிகளை கடக்க செல்லும் கன்னி சாமிக்கு முதல் பயணத்தில் ஆடை கருப்பு தானே? முதல் முறையாக சபரி மலை கோவிலுக்கு செல்லும் நபருக்கு அந்த கோவிலை பற்றி எதுவும் தெரியாது அல்லவா.?
ஆகவே அவரை வழி நடத்தி அழைத்து செல்ல ஒரு குரு வேண்டும் அல்லவா? இங்கே குரு, பதினெட்டு படி, கருப்பு நிற ஆடை இவைகளை சிந்தித்து பாருங்கள் ஐயப்பன் என்கிற “சாஸ்தா” என்பவர் 18படிநிலைகளை கடந்த ஒரு சித்தர் என்பது புரியும்.
குருகுலத்தில் ஒரு மாணவன் ஒவ்வொரு பருவத்தைக் கடந்து செல்லும் பொழுதும் அவனுடைய மூளை வளர்சியடையத் தொடங்கும், சிந்திக்கும் ஆற்றல் பெருகும்,
திறமைகள் வளரும். இதன் அடிப்படையில் ஒரு மாணவனுக்கு நிறப்படிநிலையின் அடுத்த நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன. அதாவது வண்ணங்கள் தொடர்ச்சியாக 3ஆண்டுக்கு ஒரு நிறம் என்று மாறி மாறி வரும். மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வி, ஆனால் இங்கே ஆறு நிறங்கள் தான் உள்ளன
அதனால் பதினெட்டு ஆண்டுகளை மூன்று மூன்று ஆண்டுகளாக மொத்தம் ஆறு பருவங்களாகப் பிரித்தனர். ஒரு பருவத்துக்கு ஒரு நிறம் என வகைப்படுத்தினர். கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து குருகுலத்தில் சேரும் ஒரு ஆறு வயதுப்பாலகன், குருகுலம் முடிந்து வெளியில் செல்லும் பொழுது அறிவாற்றல் மிக்கவானாக, ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாறுகிறான். அதாவது இருளில் இருந்து ஒளியை நோக்கிய குருகுலப் பயணத்தின் இறுதில் ஒளிபொருந்தியவனாய் மாறுகிறான். இந்த ஆறு நிலையை கடந்து பின்
7நிலைக்கு போக வேண்டும் என்று தீர்மானித்தால் அதற்க்கான நிறம்
என்ன தெரியுமா….???
குருகுல கல்வியில் ஆறு படிநிலைகளை தாண்டி ஏழாவது படிநிலையின் வண்ணம்
நீர் வண்ணம் இப்படி பிரித்து பாருங்கள்…
நீர்+வனம்=நிர்வாணம்.
ஆறு வர்ணாசிரம வாழக்கையை முடித்த ஒரு குருகுல மாணவன் அவன் விருப்பபடி அவனது வாழ்க்கையை சுயமாக தீர்மானிக்கலாம். அதாவது இல்லற ல் வாழ்க்கையில் இருந்தும் மக்களுக்கு அறநெறிகளை போதிக்கலாம், துறவறம் சென்றும் அவைகளை போதிக்கலாம் என்பது அவரவர் விருப்பம்….
துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிக குறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆறு வர்ண படிநிலைகளை கடந்து ஞானத்தால் சிறந்து உயர்ந்தவர்கள் சித்தர்கள். சித்தம் கொண்டு யோக நிலையைகொண்டவர்கள் யோகிகள்.
ஏழாம் வர்ண படிநிலையை சார்ந்தவர்களை சாதாரண மனிதனால் கொல்வது என்பது சாத்தியமில்லை. நிர்வாண நிற படிநிலை என்பது குண்டலினி யோகத்தில் சக்தி பெற்று
கடவுளுக்கு நிகரான சக்தியை கண்டவர்களை
மானிட பதறுகள் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால், ஆறாம் படிநிலைக்குள் இருந்த பல ஆயிர கணக்கான சித்தர்களை கஸார் பகுதியில் இருந்து எகிப்து தேசத்தில் குடிபுகுந்து அங்கிருந்து இஸ்லாமியர்களால் விரட்டி அடிக்கப்பட்ட இஸ்ரேல் யூத களப்பினத்தவர்கள். பின்பு தென்னிந்திய மைசூர் அரசனை காம வஞ்சகத்தால் வீழ்த்தி
மைசூரை கைப்பற்றி பின் தென்னிந்திய சித்தர்களை வதை செய்து கொன்று குருகுல கல்வி முறையை அழிதொழித்து குல கல்வி முறையை கட்டமைத்து அவன் சமூகத்தை மட்டும் உயர்திக்கொண்டான் கஸார் வந்தேறி.
வர்ணாசிரம படிநிலையில் ஏழாவது நிறமான நீர்வண்ண நிலையை அடைவது மிகக் கடினம்
அது மாணவர் பருவத்துக்குத் தேவைப்படாது என்றதால் ஆறாவது நிறமான வெள்ளை அவர்களின் இறுதி பருவமாகக் கருதப்பட்டது. (சிறுவயதில் துறவறம் செல்ல போதுமான ஞானம் இருக்காது) தமிழக குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வர்ண முறையானது ஆசியக் கண்டம் முழுதும் பரவியிருந்தது.
எடுத்துக்காட்டாக இன்றைய கராத்தே பயிற்சியில், இந்தத் தற்காப்புக் கலையைக் கற்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் இடுப்புப் பட்டைகள் வழங்கப்படுவதை அறிவோம். தொடக்க நிலையில் இருப்பவனுக்கு வெள்ளைநிறப் பட்டையும், இக்கலையை முழுதும் கற்றுத் தேரியவனுக்கு கருப்பு நிறப் பட்டையும் கொடுக்கப்படும். இந்த முறை எதைக் குறிக்கும் என்றால் உடல் வலிமையில்லாத ஒருவன், வலிமை பெற்ற ஒரு போராளியாக மாறுவதைக் குறிக்கிறது.
தற்காப்புக் கலைகளைக் கற்கும் பொழுதுமட்டும் நிறங்களின் வரிசை தலைகீழாக இருக்கும். காரணம் கரிய(கருப்பு) நிறத்தில் ஆரம்பித்து வெள்ளை நிறம் வரை செல்வது அறிவு வளர்ச்சியைக் குறிக்கும். வெள்ளை நிறத்தில் இருந்து கரியநிறத்துக்குச் செல்லுதல் உடல் வலிமை அடைவதைக் குறிக்கும்.
ஆனால் இன்றைய கரெத்தேவில் நிறங்கள் சரியான வரிசையில் அமைந்து இருக்காது.
நீலம், பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகியவை மாறிமாறி வரும். இதற்குக் காரணம் காலத்தினால் வந்த சிதைவுகள். தமிழ்நாட்டில் உருவான இம்முறை ஆசிய நாடுகளுக்குச் சென்று நடைமுறைக்கு வரும் பொழுது சிறிய மாற்றங்கள் வருவது இயற்கைதான்.
மேலும் ஆசியாவில் உருவான தற்காப்புக் கலைகளான கராத்தே, ஜூடோ, குங்ம்பூ போன்றவற்றிற்கு பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உலக அளவில் பள்ளிகள் அமைந்தன. ஆக ஈராயிரம் ஆண்டுகளில் உண்மையான நிற வரிசையில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் கொள்கையின் கரு மாறவில்லை என்பதே சிறப்பு!
நிற வரிசை என்பது
1.வெள்ளை
2.பொன்னிறம்
3.சிவப்பு
4.பச்சை
5.நீலம்
6.கருப்பு
7.நீர் வண்ணம்.
கிராமங்களில் கன்னிமார் கதை சொல்லுவார்கள், எனக்கு என் பாட்டி சொன்ன கதையில் ஏழு கன்னியில் இளைய கன்னி நிவாவனமாக இருக்குமாம். அது நம்மை (வயசு பசங்களை) பிடித்துகொண்டாள். உடம்பை உருக்கி எலும்பும் தோலுமாய் தோற்றம் கொண்டு கடைசியில் மரணம் அடைந்து விடுவோமாம் இப்படி கதை சொல்வாங்க இந்த கதையை நீங்களும் கேள்வி பட்டிருக்கலாம்.
இதில் இரண்டுவகையில் நமக்கு நன்மையை மறைமுகமாக சொல்லிருக்காங்க
1.வெயில் நேரத்தில் காடு மேடுகளில் சுற்ற கூடாது என்பதற்காவும்,
2. ஏழு கன்னியில் இளைய கன்னி நிர்வாணமாக இருப்பாள் என்பது
7வது வர்ண படிநிலை என்பது நீர் வண்ணம் என்பதை சூசகமாய் சொன்ன கதை தான் அது.
அந்த ஏழு வண்ணத்தையும் ஏழு வண்ணப்படி நிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர். அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் மற்றும் பீடம் மட்டுமே உண்டு குருக்குல வகுப்புகள், மாணவர்கள் குடிநீர் மற்றும் பிற நீர்த்தேவைகளுக்காக நீர்நிலைகள் அருகிலேயே இருந்தன, அதனால் கன்னிமார் கோயில்கள் பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகிலேயே அமைந்துள்ளன.
இனி கன்னிமார் எனும் சப்த கன்னிகளும்,
ஏழு வண்ணங்களும், அந்த ஏழு கிரகங்களும்,
மாந்திரீகதின் அவைகளின் செயல் பாடுகளும் என இன்னும் ஆழமாக தெரிந்துகொள்வோம் காத்திருங்கள் நன்றி.
November 2021
ஸ்ரீமன் நாராயணனின் பல்வேறு திருநாமத்தைத் தினசரி சொல்லுங்கள்.
ஓம் ஹரி, ஸ்ரீஹரி, முரஹரி, நரஹரி, க்ருஷ்ணாஹரி, அம்புஜாக்ஷா, அச்சுதா, உச்சிதா, பஞ்சாயுதா, பாண்டவ தூதா, லக்ஷ்மீ ஸமேதா, லீலாவிநோதா, கமலபாதா, ஆதீ மத்யாந்த ரஹிதா, அநாதரக்ஷகா, அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்டநாயகா, பரமானந்த முகுந்தா, வைகுந்தா, கோவிந்தா.
பச்சைவண்ணா, கார்வண்ணா, பன்னகசயனா, கமலக்கண்ணா, ஜனார்தனா, கருடவாஹனா, ராக்ஷஸமர்த்தனா, காளிங்கநர்த்தனா, சேஷசயனா, நாராயணா, பிரம்மபாராயணா, வாமணா, நந்த நந்தனா, மதுஸூதனா, பரிபூரணா, சர்வகாரணா, வெங்கடரமணா, சங்கடஹரணா, ஸ்ரீதரா, துளஸீதரா, தாமோதரா, பீதாம்பரா, சீதா மனோஹரா, மச்சகச்ச வராஹாவதாரா, பலபத்ரா, சங்கு சக்ரா, பரமேஸ்வரா, ஸர்வேஸ்வரா, கருணாகரா, ராதா மநோஹரா, ஸ்ரீரங்கா, ஹரிரங்கா, பாண்டுரங்கா, லோகநாயகா, பத்மநாபா, திவ்ய ஸ்வரூபா.
புண்ய புருஷா, புருஷோத்தமா, ஸ்ரீராமா, ஹரிராமா, பரந்தாமா, ந்ரஸிம்ஹா, த்ரிவிக்ரமா, பரசுராமா, ஸஹஸ்ர நாமா, பக்த வத்சலா, பரமதயாளா, தேவானுகூலா, ஆதிமூலா, ஸ்ரீலோகா, வேணுகோபாலா, மாதவா, மாதவா, ராகவா, கேசவா, வாஸுதேவா, தேவதேவா, ஆதிதேவா, ஆபத்பாந்தவா, மஹானுபாவா, வஸுதேவதனயா, தசரத தனயா, மாயாவிலாசா, வைகுண்டவாசா, சுயம் ப்ரகாசா, ஸ்ரீவெங்கடேசா, மாயா, ஆயா, வெண்ணெயுண்ட சேயா, அண்டாகளேத்தும் தூயா, உலகமுண்டவாயா, நானா உபாயா, பக்தர்கள் சகாயா சதுர்புஜா, கருடத்வஜா, கோதண்டஹஸ்தா, புண்டரீகவரதா,
ஓம் விஷ்ணோ, ஓம் பரந்தாமா, ஓம் பரமதயாளா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீமத் நாராயண ஸரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம: ஸ்ரீமதே ஆதிநாராயணாய நம: ஸ்ரீமதே லக்ஷ்மீ நாராயணாய நம: ஸ்ரீமதே ஸுர்ய நாராயணாய நம: ஸ்ரீமதே சங்கர நாராயணாய நம. ஓம் கோவிந்த கோவிந்த, ஓம் கோபால கோபால கோபாலா.
மனிதர்களுக்கு துன்பம் வருவது இயம்பு தான். ஆனால் அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. இறைவன் மனதை குளிர்வித்தால் அவர் தானாக நம் மனதை குளிரச்செய்வார். அந்த வகையில் மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் தாலாட்டை பாடினால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.
தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.
அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம
ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம
ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம
ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம
ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம
ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம
ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம
ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம
ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம
ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம
ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம
ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம
ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம
ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம
ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம
ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம
ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம
ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
ஓம் ஹரிஹராத்மஜாய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்
3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
என்று பாடி கற்பூரம் ஆர்த்தி எடுக்க வேண்டும்
ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.
தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி! அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி.
1. முருகன் – வைகாசி விசாகம்
2. ஐயப்பன் – பங்குனி உத்திரம்
3. ராமர் – புனர்பூசம்
4. கிருஷ்ணன் – ரோகினி
5. ஆண்டாள் – ஆடிபூரம்
6. அம்பிகை – ஆடிபூரம்
7. சிவன் – திருவாதிரை
8. விநாயகர் – ஆவணி விசாகம்
9. பார்வதி – ஆடிபூரம்
10. அனுமன் – மார்கழி அமாவாசை
11. நந்தி – பங்குனி திருவாதிரை
12. திருமால் – திருவோணம்
13. பரதன் – பூசம்
14. லக்குமன் – ஆயில்யம்
15. சத்ருகன் – மகம்
16. நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் – பிரதோச நேரம்
17. வீரபத்திரர் – மாசி மாதம் பூச நட்சத்திரம்
18. வாமனர் – ஆவணி திருவோணம்
19. கருடன் – ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்
இதுவே கடவுள்களின் அவதாரம் செய்தது ஆகும்
33 கோடி தேவர்கள் யார் என்று பார்ப்போம்
1. ஆதித்தர் – 12 கோடி பேர்
2. உருத்திரர் – 11 கோடி பேர்
3.அஸ்வினி – 2 கோடி பேர்
4.அஷ்ட வசுக்கள் – 8 கோடி பேர்
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தட்டும் என்று சொல்வார்கள்
பூஜை என்றால் என்ன? பற்றிப் பார்ப்போம்
ஆத்ம சாதகன் அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும்
ஆறு கால பூஜை பற்றிப் பார்ப்போம்
1. உஷத்காலம் – காலை 6 மணி
2. காலசந்தி – காலை 8 மணி
3. உச்சி காலம் -பகல் 12 மணி
4. பிரதோசம் – மாலை 6 மணி
5. சாயரட்சை – இரவு 8 மணி
6. அர்த்தசாமம் – நடுஜாமம் 10.30 to 11.30 வரை
தீப ஆராதனை ( கிரியை) பற்றிப் பார்ப்போம்
1. கற்பூரம் – இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, சிவத்திலே ஜீவன் கரைந்து இரண்டற்ற தன்மை உண்டாக்குவது ஆகும் அத்தகைய நிலையை நாம் நமக்குள் அகக்கண்ணால் அடைய வேண்டி கற்பூர ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும் நமக்கு அஞ்ஞானத்தை ( அறியாமையை, இருளை) போக்கி மெய்ஞானத்தை ( ஞானஅறிவை, ஒளியை) அருளுவது ஆகும்
2. தேங்காய் – ஆன்மாவின் ( உயிரின் ) மும்மலத்தை ( ஆணவம், கன்மம், மாயை, ) நீக்கி பேரின்பம் பெறவேண்டும் என உணர்த்துதல் ஆகும் மேல்மட்டை – மாயா மலம், உரித்தெடுக்கும் நார் – கன்ம மலம், உள்ளே ஓடு – ஆணவ மலம், வெள்ளைப்பருப்பு – பேரின்பம் ( வீடுபேறு, முக்திபேறு ) ஆன்மா நீர் – ஆண்டவன் திருவருள் ஆகும்
பழம் – சாதகனின்( அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு மெய்ஞானத்தை அடைந்தவன்) நல்வினை பலன்களை குறிக்கும்
விபூதி ( திருநீறு) – பசு சாணத்தை சாம்பலாக்கி செய்யப்படுவது ஆகும் உடல் சாம்பல் ( அ) மண் ஆகலாம் என்ற தத்துவத்தை குறிப்பது ஆகும் திருநீறு உடலில் உள்ள அசுத்தம் அகற்றி நோய் கிருமிகளை போக்கி பிணி அகற்றும் மருந்து ஆகும் பதி,பசு,பாசம், என்ற மூன்றாக கோடுகளை படித்த வண்ணம் சைவமும், நின்ற வண்ணம் வைணவமும் இடும் உடம்பில் திருநீறு இடும் இடங்கள் 16 ஆகும் திருநீறை பேணி அணிபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் மேலும் எல்லா நலன்களையும் தர வல்லது திருநீறு ஆகும்
குங்குமம் – தேவியின் அருளையும், நிறத்தையும் குறிக்கும் நெற்றி புருவத்தின் மத்தியில் வைப்பார்கள் குங்குமம் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம் குறைவு, நினைவாற்றல் அதிகரிக்கும், வெப்பத்தைக் குறைக்கும் தன்மை குங்குமத்திற்கு உள்ளது
கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு இருப்பது எதற்கு? என்று பார்ப்போம்
வெள்ளைக்கோடு ( சுக்கிலம்) சிவமயம், சிவப்புகோடு ( சுரோணிதம்) சக்தியை குறிப்பது இரண்டும் சேர்ந்து உயிரம்சம் இரண்டும் சேர்வதால் தான் உடலும் அதனை தாங்கி இயங்கும் உயிரும் உண்டாகிறது ஆகும்
திருக்கோவில் செல்வது யான், எனது, என்ற செருக்கு போவதற்காகத்தான் மேலும் வாழும்தன்மை பெறுவதற்காகத்தான் இந்த கோவில் வழிபாடுகள் எல்லாம் நம்மை செம்மையாக்கி நல் வழி படுத்துவது ஆகும்
மேஷராசிக்காரர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது, தொழிலில் கூட்டணியில் இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலம் இது,, ஒப்பந்தத்தை முறைப்படுத்தி செய்து கொள்ளுங்கள்,, குடும்பத்தில் மூன்றாவது நபரின் பேச்சை கேட்டால் வில்லங்கம் தான்,
ரிஷப ராசிக்காரர்கள், இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள், எந்த வேலையாக இருந்தாலும் பணிகளில் மிகுந்த இடையூறுகள் ஏற்படும், அலைச்சல் டென்ஷன் இதனால் உடல் உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியம் அவசியம், ஆசையே அலை போலே, என்பதற்கேற்ப தங்கள் ஆசைகளை ஈடேற அதீத முயற்சி தேவை,
மிதுன ராசிக்காரர்கள், ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் குலதெய்வத்தை அமாவாசை தோறும் வழிபாடு செய்யுங்கள்,,
கடகம் ராசிக்காரர்கள், புதிதாக வண்டி வாகனம் நிலபுலன்கள் வாங்கும் பொழுது டாக்குமெண்ட் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொள்வது சிறந்தது, பூர்வீக சொத்துப் பிரிவினை அதாவது பாகப்பிரிவினை ஏற்படும்,, பழைய வண்டிகளை பழுது பார்ப்பது சிறந்தது, தந்தையின் ஆயுள் ஆரோக்கியத்தின் அவசியம் அக்கறை தேவை,
சிம்ம ராசிக்காரர்கள், குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல தடாலடியான முடிவுகளை எடுக்காதீர்கள், சிந்தித்து அனுபவசாலிகள் அவர்களிடம் ஆலோசனை செய்து எந்த ஒரு காரியத்தையும் செய்தால் நன்மை பெறலாம், சிலரின் தாய் தந்தையருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்
கன்னி ராசிக்காரர்கள், தாங்கள் ஒன்றும் தானம் தர்மம் செய்ய நாட்டின் ராஜா அல்ல, தாங்கள் சம்பாதிக்கும் சொத்துக்கள் அனைத்தையும் சேமித்துவைக்க பாருங்கள், தேவையில்லாத முதலீடு தவிர்க்கவும், கை விரிக்கும், சிலருக்கு சகோதர பகையால் பிரிவினை ஏற்படும்,
துலாம் ராசிக்காரர்கள், தலை மேல் பாரம் விழுந்தது போல இருக்கும், ராமர் பாலம் கட்டிய பொழுது அனுமன் ஒவ்வொரு கல்லிலும் ராமநாமம் எழுதி எளிதாக தூக்கிக் கொண்டு கடலில் போட்டாரோ அதுபோல நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் ராமநாமத்தை ஜெபியுங்கள்,, உங்கள் தலை மேல் இருக்கும் பாரம் சுக்குநூறாக உடையும் பொழுது உங்கள் மன பலம் விருத்தியாகும்,
விருச்சிக ராசிக்காரர்கள், கடந்த காலங்கள் கஷ்டப்பட்டேன், இன்னும் நான் கஷ்டப்பட வேண்டுமா..? ? தங்களுக்கு எல்லாமே விரயமாக தான் சென்று கொண்டு இருக்கிறது, குடும்பத்தில் திருமணம் போன்ற நல்லது செய்தாலும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும், தீயது நடந்தாலும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும், இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று எண்ணங்கள் தோன்றும், செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள், தடைகளை தடுக்க சிந்தனைகளை மேம்படுத்துங்கள்
தனுசு ராசிக்காரர்கள், நம்ம எப்பொழுதுமே சந்தோசமாக தான் இருப்போம், திடீரென ஏற்படும் இழப்பு பேரிடியாக அமையும், ஆக இந்த காலகட்டத்தில் நாம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவதே நல்லது, கணவன் மனைவி அந்தரங்க விஷயங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும், சிலருக்கு கள்ள உறவுகள் வெளிப்பட்டு மாட்டிக்கொள்ள நேரிடும்,
மகர ராசிக்காரர்கள், தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சரி பார்த்துக் கொள்வது நல்லது, குடும்பத்திற்காக நாயாய் பேயாய் அலைய வேண்டியது இருக்கும், அதற்கேற்ற வருமானமும் இருக்காது, அவன் பாரு ஒரு வேலை செய்யல நல்லா சம்பாதிக்கிறான், நான் மட்டும் இப்படி இருக்கிறேன் என்ற வருத்தம் தங்களுக்கு இருக்கும், இவை எல்லாம் கொஞ்ச காலம்தான் பொறுத்துக் கொள்ளுங்கள்,
கும்ப ராசிக்காரர்கள், தாங்கள் ஒருபக்கம் கதறிக்கொண்டு குமுறிக் கொண்டு இருப்பது தெளிவாக தெரிகிறது, இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா,,,? நாராயணா என எப்ப தான் நீ காப்பாத்த போற என்று சதா புலம்பிக் கொண்டே இருக்கும் நேரம் இது, வருகிற வாய்ப்பில்லாமல் அடுத்தவனுக்கு போய்க்கொண்டிருக்கிறது, அவர்களை பார்த்தால் உங்களுக்கு ஒரு பொறாமை வரும் நாம் இன்னும் இப்படியே இருக்கிறோம் என்று, தற்சமயம் பொறுமை தான் அவசியம்,
மீன ராசிக்காரர்கள், ஏன் வாழ்கிறோம் என்றும் தெரியாது ஏன் இருக்கிறோம் என்றும் தெரியாது, இப்படி ஒரு காலகட்டம் இது, தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ள வரிகள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள், பேராசைப் பட்டு அதை செய்து விடலாம் இதை செய்து விடலாம் என்றாள் அதிலும் நஷ்டம் தான், தங்களுக்கு தேவையானது தற்சமயம் சிறந்த ஆலோசனை, தங்களின் திறமைக்கேற்ப உடையவர்களிடம் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது
எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாத தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு சிறிது நன்மையான பலன்கள் கிடைக்கும்
பொதுவாக இந்த ஆறு மாத காலங்கள், உலகில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம், எதிர்பாராத நிகழ்வுகளை காணலாம், நாட்டில் மட்டுமல்ல தங்கள் குடும்பத்திற்குள்ளும் காணலாம்,, இந்த வையகம் நலம்பெற, நாடு நலம் பெற, தங்கள் குடும்பம் நலம் பெற, தயவுசெய்து தங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்தனை செய்யுங்கள்