386
வெள்ளிக்கிழமை அருகம்புல், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு கணபதி ஹோமம் செய்தால் பெருஞ்செல்வமும், நீண்ட ஆயுளும் வாய்க்கும். நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்ய, கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும். செந்தாமரையால் ஹோமம் செய்ய, பெரும் பொருள் சேரும்.
வெண்ணிற நீர்நொச்சி கொண்டு ஹோமம் செய்ய, உயர்வை பெறலாம். தயிரால் ஹோமம் செய்ய, வளம் பெருகும். நீலோற்பவ மலரால் ஹோமம் செய்ய, அனைத்து மக்களும் வசியமாவர். வெல்லம், வாழைப்பழம், பாயாசம், நெய் கலந்த தேங்காய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் எண்ணியவை திண்ணமாக நிறைவேறும்.
விநாயகரை செவ்வாய்க்கிழமைகளிலும் துர்க்கையை வெள்ளிக்கிழமைலும் வழிபட்டால் ராகு, கேது ஆகிய கிரகத்தின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.