நம்மை சுற்றிலும் சூட்சுமத்தில் பல தீய சக்திகள் உலாவலாம் . அவைகள் குழந்தைகள் கணவில் வரவும் செய்கின்றன . அதை கண்டு குழந்தைகள் தூக்கத்தில் அலரி எழந்திருக்கவும் செய்கின்றன .
அப்படி பட்ட நேரத்தில் குழந்தைக்கு தெய்வீக காப்பு ரட்சையை பூசாரியிடம் இருந்து வாங்கி குழந்தையின் இடுப்பில் கட்டுகின்றனர் .
சிலர் கையிலும் , சிலர் கழத்திலும் , சிலர் காலிலும் அனிந்து கொள்கிறார்கள் .
பெரியவர்களாக ஆன பிறகு கூட சிலர் தொடர்ந்து அனிவதை பார்க்க முடிகிறது .
இப்படி பயமுறுத்தும் சூட்சும தீய சக்திகள் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு காமம் , மோகம் உணர்வுகளை தூண்டிவிடும் தீய சக்திகளும் இருக்கிறது .
பயம் , கோவம் , காமம் , மோகம் , தற்கொலை எண்ணங்கள் , பேராசை , பொறாமை , ஆணவம் ,.. போன்ற தீய குணங்களை மக்கள் மனதில் தூண்டி விடுகிற சூட்சும தீய சக்திகள் பல இருக்கிறது .
இவற்றிடம் இருந்து எல்லாம் தங்களை காப்பாற்றி கொள்ள யாரும் காப்பு ரட்சை அணிவது இல்லை . காரணம் இவைகள் இருப்பதை அவ்வளவு எளிதாக உணர முடியாததே ஆகும் .
ஆனால் இந்த காமம் , மோகம் உணர்வுகளை தூண்டிவிடும் தீய சக்திகள் இருக்கிறதே அது செய்யும் வேலைகள் தான் உலகில் அதிகமாகி கொண்டே போகிறது .
இதன் பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் . அதிலும் குறிப்பாக ஆன்மீகவாதிகள் , யோகிகள் , சன்னியாசிகள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் , போன்றோர் அதன் பிடியில் இருந்து விடுபட வேண்டியது மிக மிக அவசியமாகும் .
இதற்கு என்ன வழி என்று ஆராய்ந்து பார்த்த போது இறை அருளால் அறிந்ததாவது :-
ஒவ்வொருவரும் ஆடை அணியும் போது சண்முக காயத்ரி சுலோகத்தை சொல்ல வேண்டும் .
ஆடை அணியும் போது எல்லாம் சண்முக காயத்ரி மந்திரம் சொல்லி விட்டு அணிவதால் அந்த ஆடை ஆனது ஒரு ரட்சை போல் செயல்பட ஆரம்பிக்கும் .
சண்முகம் காயத்ரி மந்திரத்திற்கு காமம் எண்ணங்களை வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது .
இந்த காமம் எண்ணங்கள் வராமல் தடுப்பதற்கு வள்ளலார் , விவேகானந்தர் போன்றோர்களே ரொம்ப கஷ்டப்பட்டனர் .
அதனால் கலியுகத்தில் அதிக சக்தி கொண்ட காமம் எண்ணங்களை தூண்டிவிடும் தீய சக்திகளை வெல்வது என்பது சாதாரண மனிதர்களால் முடியாது .
தெய்வசக்தியின் துணை இல்லாமல் இதனை வெல்ல இயலாது .
தெய்வங்களிலே எந்த தெய்வம் இந்த அசுத்த எண்ணங்கள் நம்மை அண்டாது தடுத்து காத்து ரட்சிப்பார் என்று பார்த்தோமே ஆயின் நமக்கு தெரிய வருவது ஸ்ரீ சண்முக பெருமான் ஆவார் .
எனவே ஸ்ரீ சண்முகம் தெய்வத்தின் காயத்ரியை நாம் ஜெபித்தோமானால் நிச்சயம் நமது உடல் உணர்ச்சிகளை கட்டு கோப்பில் வைத்து இருக்கும் திறனை தருவார் .
ஸ்ரீ சண்முகர் காயத்ரி
****************************
” ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா சேனாய தீமஹி
தந்நோ சண்முக ப்ரசோதயாத் . “
மேலும்
” ஓம் சரவணபவ சண்முக பவ ஓங் ஆங் ”
என்று இந்த இரு சுலோகங்களையும் சொல்லியவாறு ஆடைகளை அணிந்தோமானால் அந்த ஆடை ஆனது ரட்சையாக மாறி நம்மை நல்ல ஒழக்க சீலராய் வாழந்து நற்பெயர் பெற்று வாழம் மனிதனாக ஆக்கும் .
எனவே இதை கடைபிடிப்போம் . அடுத்த தலைமுறைக்கும் சொல்லி தருவோம் .