Home ஆன்மீக செய்திகள் பௌர்ணமி பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பௌர்ணமி பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

by admin
shiva-palabhishekam_தோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்

பௌர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.

பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும். வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.

You may also like

Translate »