கோமதி சக்கரம் பலன்கள் கோமதி சக்கரம் சங்கு வடிவில் உள்ள ஒரு கல். கோமதி சக்கரம் கோமதி நதிக்கரையில் இருந்து கிடைப்பதால் இதற்கு கோமதி சக்கரம் என்று பெயர் வந்தது. மஹாலக்ஷிமிக்கு பிரியமானது இந்த கோமதி சக்கரம். கோமதி சக்கரம் இருக்கும் வீட்டில் மஹாலக்ஷ்மி தங்குவார் என்பது ஐதீகம். இயற்கையின் படைப்பில் கோமதி சக்கரம் என்பது மிகவும் அற்புதமான ஒன்றாகும். வட நாடுகளில் கோமதி சக்கரம் இல்லாத வீடுகளே இல்லை என்றே சொல்லலாம்.
ஏனென்றால் வட நாடுகளில் கோமதி சக்கரத்தை அதிமாக பூஜைகளுக்கு பயன்படுகிறார்கள். அவ்வளவு புனிதம் நிறைந்தது கோமதி சக்கரம். இன்னும் சொல்ல போனால் மகாவிஷ்ணு உடைய சுதர்சன சக்கரத்திற்கு நிகரான கோமதி சக்கரத்தை வட மாநிலத்தில் வணங்கி வருகிறார்கள். நிறைய பிரச்சனைகளுக்கு இந்த கோமதி சக்கரம் சிறந்த தீர்வு கொடுக்கிறது. இது வட நாடுகளில் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
கோமதி சக்கரத்தை எப்படி அணிவது
தங்க நகைகளான மோதிரம், செயின், கம்மல் போன்ற தங்க நகைகளில் கோமதி சக்கரத்தை வைத்து அணிகிறார்கள். இதனால் உடம்பில் நோய் குணமாகும்.
செல்வம் செழிக்கும் செல்வம் தங்கும் என ஐதிகம். ஆணோ, பெண்ணோ முக்கியமான வேலை சம்பந்தமாக வெளியில் செல்லும் பொழுது இந்த கோமதி சக்கரத்தை இரண்டு இலக்காக அதாவது 2,4,6 என்ற இரட்டை முறையில் அணிதோ அல்லது பையில் வைத்து சென்றால் நிச்சயமாக செல்லும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
கோமதி சக்கரம் வீட்டில் வைப்பதாக இருந்தால் பச்சை அல்லது மஞ்சள் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கோமதி சக்கரம் எங்கு இருந்து கிடைக்கிறது
கோமதி சக்கரம் கோமதி நதிக்கரையில் இருந்து கிடைக்கிறது. கோமதி நதி கரை கிரிஷ்ணற்கு உரிய இடமாகும். கோமதி சக்கரத்தை வாங்குவதை விட பெரியோர்களிடம் இருந்து அன்பளிப்பாக வாங்கினால் நல்லது. கடையில் வாங்குவதாக இருந்தால் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வாங்கவும்.
கோமதி சக்கரத்தை யாரெல்லாம் அணியலாம்
கோமதி சக்கரம் என்பது இயற்கையாக நமக்கு கிடைக்கிறது. எனவே ஜாதி மதம் அனைத்தையும் கடந்த ஒன்று ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டின் என வேண்டுமானாலும் இந்த கோமதி சக்கரத்தை அணியலாம் குறிப்பாக ராகு கேது தோஷம் உள்ளவர்கள் காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த கோமதி சக்கரத்தை அணிந்து வழிபட்டு வந்தால் தோஷம் நிவர்த்தியாகி நல்ல பலனை தரும்.
வேளையில் பிரச்சனைக்கு மேல் பிரச்னை நஷ்டமோ அல்லது வேலை பாதியில் நின்று விட்டாலோ நீங்கள் செய்ய வேண்டியது பதினொன்று கோமதி சக்கரத்தை எடுத்து கொண்டு தென்கிழக்கு பார்க்க ஒரு இடத்தில் நினைத்ததை வேண்டி கொண்டு மண் தோண்டி புதைத்து வைத்தால் வாஸ்து திரிஷ்டி கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும்.
கோமதி சக்கரம் எந்த விரலில் அணிவது
கோமதி சக்கரத்தை பெண்கள் இடது கையிலும் ஆண்கள் வலது கையிலும் அணிய வேண்டும். பெண்கள் இடது கை ஆல்காட்டி விரலில் அணியலாம் மற்றும் மோதிர விரல்களில் கூட அணியலாம் நடு விரலில் அணிய கூடாது. ஆண்கள் வலது கை மோதிர விரலில் அணியலாம். கோமதி சக்கரத்தின் சுழி எப்பொழுதும் மேல் பார்க்குமாறு அணியவும்.
கோமதி சக்கரம் பலன்கள் – Gomati chakra benefits in tamil
கோமதி சக்கரம் வாஸ்து கோளாறுகளை நீக்குகிறது.
ஜாதக கோளாறுகளை நீக்குகிறது.
குழந்தைகளுக்கு தங்கம் அல்லது வெள்ளி சைனில் இந்த கோமதி சக்கரத்தை அணிந்து விட்டால் குழந்தை நன்றாக படிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் சக்தி நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
கோமதி சக்கரத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கோமதி சக்கரம் அணிந்து எந்த வேளையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும்.
குலதெய்வம் முன் கோமதி சக்கரத்தை வைத்து பூஜை செய்து வீட்டின் வெளிப்புறம் மேல் கட்டினால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி அனைத்தும் நீங்கும்.
பதினொன்று கோமதி சக்கரத்தை சிவப்பு துணியில் கட்டி பூஜையின் அறையில் வைத்து பூஜை செய்து வந்தால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
கோமதி சக்கரம் தீராத தலை வலி, கடன் பிரச்சனை, வேலை பிரச்சனை போன்றவற்றிற்க்கு கோமதி சக்கரம் சிறந்த தீர்வாகும்.
கோமதி சக்கரம் நாக தோஷத்தை நீக்கும் வல்லமை கொண்டது.