Home ஆன்மீக செய்திகள் எந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

எந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

by admin
vinayagar-clear-Problems_எந்த விநாயகரை வழிபட்டால் என்ன பிரச்சனை தீரும்

பிள்ளையார், விநாயகர், கணபதி, கணேஷன் என பல்வேறு பெயர்களை வைத்து வணங்கக் கூடிய முதல் கடவுளாக பார்க்கப்படுபவர் விநாயகப் பெருமான்.

தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு மதித்து செயல்பட்ட பிள்ளை என்பதால் அவருக்கு பிள்ளையார் என பெயர் வந்தது. மிகவும் எளிமையானவராக விநயகர் இருப்பதால் அவர் தெரு ஓரம், குளத்தங் கரை, என எங்கும் தரிசிக்கக் கூடியவராக உள்ளார்.

எல்லா கடவுளுக்கும் முதன்மையானவராக இருப்பதால், கோயிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவராக பிள்ளையார் உள்ளார்.

32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் எளிமைக்கும் அடையாளமாக சுண்டல் அல்லது அருகம் புல் வைத்து வழிபட்டாலே நாம் வேண்டிய வரங்களை வாரி வழங்கக் கூடிய கடவுளாக பிள்ளையார் உள்ளார்.

அவர் களிமண், கல்லால் செய்யப்பட்ட விநாயர் என எப்படி வழிபட்டாளும் அருள்பவர். அவ்வளவு ஏன் பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தால் கோடி புண்ணியம் என்பவர்.

நாம் மனதார வழிபட்டாலே அனைத்து வித நலன்களை அள்ளித்தருவார்.

எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா?

எந்தெந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்…

மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அருள்வார்.

கருங்கல்லினால் ஆன விநாயகரை எந்த காரியமும் வெற்றியில் முடிய அருள்வார்.

விபூதியால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வெப்பத்தால் வெப்பத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கக் கூடியவர்

குங்குமத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீரும்.

சந்தனத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் நல்ல பிள்ளைபேறு கிட்டும்.

உப்பினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

வெல்லத்தினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் உடலில் உள்ள கொப்பளங்கள் மறையும்.

சர்க்கரையால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வீட்டில் இனிமையான தருணங்கள் மேலோங்கும்.

மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களையும் அருள்வார்.

பசுவின் சாணத்தல் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடக்கும்.

வெள்ளெருக்கில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் பில்லி சூனியம் அகலும்.

வாழைப்பழத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் விநாயகரை வழிபட்டு நல்லருள் பெற்றிடுங்கள்.

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

விநாயகருக்கான காயத்ரி மந்திரம் :

‘ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’

விநாயகருக்கான காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட்டு நல் கதி அடையுங்கள்.

ஓம் விநாயகனே போற்றி

ஓம் விநாயகனே போற்றி

You may also like

Translate »