மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. சிவனை தரிசனம் செய்ய சிவ ஆலயங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் நாளை விடிகாலை 6 மணி வரை சிவ ஆலயங்களில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் விடிய விடிய நடைபெறும். பக்தர்கள் சிவபெருமானுக்கு வேண்டிய அபிஷேக பொருட்களை வாங்கி தரலாம். பால், பன்னீர், சந்தனம், வில்வம், பழங்கள் என பல அபிஷேகப்பொருட்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் நிறைய பலன்கள் கிடைக்கும். எந்த பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து வாங்கிக் கொடுங்கள்.
சிவனின் அருள் பார்வை உங்களுக்கு எளிதாக கிடைக்கும். சிவபெருமான் நமது முப்பிறவி பாவங்களையும் போக்கும் வல்லமை படைத்தவர். மகாசிவராத்திரி நாளில் சிவனை தரிசனம் செய்தால் நோய்கள் தீரும், மனக்கவலைகள் நீங்கும். வறுமை போகும். நம்முடைய முன்வினை பாவங்களை போக்க வல்லவர் சிவபெருமான்.
மகா சிவராத்திரி நாளான இன்று மாலையில் பக்தர்கள் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து, வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் வழக்கமாக அபிஷேகங்களுடன் சிறப்பு கால பூஜைகளும் விடிய விடிய நடக்கும். நாளைய தினம் காலையிலும் நடக்கும். சிறப்பு பூஜைக்காக சிறப்பு பூஜை பொருள்களும் அபிஷேகப் பொருள்களும் வாங்கி கொடுப்போம். என்னென்ன பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம் என்று பார்க்கலாம். பாவங்கள் நீக்கும் வில்வம் சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும். சிவனாருக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன.
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம் மாங்கல்ய வரம் அருளும் சாவன் மகா சிவராத்திரி – கணவரின் ஆயுள் அதிகரிக்கும் விரத மகிமை பாவங்கள் நீக்கும் வில்வம் சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.
சிவனாருக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம் மாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா வில்வ இலை அர்ச்சனை வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் தெளிவாக கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன மகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை முத்துக்கள், பேரிச்சம்பழங்கள் என பல வகையான பழங்களினால் அபிஷேகம் செய்வது சிறப்பு.
இதன் மூலம் சிவனின் முழு ஆசியும் கிடைக்கும். இந்த மகா சிவராத்திரி நாளில் பழங்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்கலாம். நலம் தரும் நல்லெண்ணெய் சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும். கோமியம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகம் கிடைக்கும். சுத்தமான பசுவின் கறந்த பாலினை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்தால் நோய்கள் நீங்கி தீர்க்காயுசு கிடைக்கும்.
பேரானந்தம் கிடைக்கும் சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் குரல் வளமையாகும். இனிய குரல் கிடைக்கும். எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும். சர்க்கரையினால் அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும். இளநீர் அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்தால் பேரானந்தமும், கைலாயத்தில் சிவனின் காலடியில் வாழும் பேறும் கிடைக்கும். கடன்கள் தீரும் சிவபெருமானை தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை அதிகமாகும். பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சொர்க்க வாழ்வு கிடைக்கும். அரிசிமாவு வாங்கிக் கொடுத்தால் தீராத கடன்களும் தீரும். அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும். நல்ல புத்திரர்கள் சிவனும் சக்தியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கிறார்.
சிவனுக்கு விபூதி அபிஷேகம் செய்வது போல குங்குமம் அபிஷேகம் செய்வதும் சிறப்பானதுதான். மகாசிவராத்திரி நாளில் குங்குமத்தினால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் நற்குணங்கள் நிறைந்த புத்திரர்கள் பிறப்பார்கள். தங்கத்தாமரை மொட்டுக்கள் தூய்மையான மங்களகரமான கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.
சந்தனம் பன்னீர் கலந்து அபிஷேகம் செய்தால் இறைவன் மீதான பக்தி அதிகமாகும். விபூதியினால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தங்கத்தாமரை மொட்டுக்கள் செய்து அபிஷேகம் செய்தால் சொர்க்க வாழ்க்கை கிடைக்கும்.