Home ஆன்மீக செய்திகள் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதன் ரகசியம் தெரியுமா?

ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதன் ரகசியம் தெரியுமா?

by admin
ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதன் ரகசியம் தெரியுமா

பொதுவாக சிலர் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டி இருப்பார்கள். குறிப்பாக நடன கலைஞர்கள் கட்டியிருப்பார்கள். மேலும் சிலர் ஸ்டைலுக்காக கட்டியிருப்பார்கள். ஆனால் கறுப்பு கயிறின் ரகசியம் பலருக்கு தெரியாது.

பொதுவாக சிலர் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டி இருப்பார்கள். குறிப்பாக நடன கலைஞர்கள் கட்டியிருப்பார்கள். மேலும் சிலர் ஸ்டைலுக்காக கட்டியிருப்பார்கள். ஆனால் கறுப்பு கயிறின் ரகசியம் பலருக்கு தெரியாது.

உடலின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நிற கயிறுகள் அணிந்த பல மக்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். புனித கயிறுகளை அணிவது இந்துக்களின் ஒரு பொதுவான நடைமுறையாகும். கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு போன்ற இடங்களில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிற கயிறுகளை கட்டி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு கயிறும் இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இவை கண் திருஷ்டி, நல்ல உடல் நிலை, செழிப்பு ஆகியவற்றிற்காக உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருக்கும்.இந்து மதத்தில் உள்ள இந்த புனித கயிறுகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அனைத்துக் கயிறுகளையும் எல்லோராலும் அணிய முடியாது. எடுத்துக்காட்டாக பூநூலை இந்து மதத்தின் மேல் ஜாதியினர் மட்டுமே அணிய முடியும். மேலும் மஞ்சள் கயிறு அல்லது மாங்கல்யமானது திருமணமான பெண்களால் மட்டுமே அணிய முடியும். அந்த வரிசையில் வருவதுதான் ஒற்றைக்காலில் கறுப்பு கயிறு…

கறுப்பு நிறம் தீயவற்றின் பார்வையிலிருந்து தரும் பாதுகாப்பை குறிக்கும். இது கண் திருஷ்டி மற்றும் தீயவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். அதுமட்டுமின்றி ஒற்றை காலில் ஒரு கறுப்பு நிற கயிறு கட்டுவது சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.

ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் நம்மை சுற்று தீய சக்திகள் நெருங்காது. அதுமட்டுமின்றி செய்வினை சூனியங்கள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்தம் அல்லது நண்பகல் 12 மணிக்கு வலது காலில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.

கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும். கறுப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக குணமடையாத தீராத நோய், உடல் நல கோளாறுகள் ஆகியவை குணமாகும்.

You may also like

Translate »