258
‘கடம்’ என்பது ‘குடம்’ என்று பொருள்படும். அமிர்த குடத்தை அருளியவர் திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர். அம்பாளின் திருநாமம், அபிராமி அம்மன் என்பதாகும். மார்கண்டேயனின் உயிரைக்காக்க, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் இது. எனவே விதியை மாற்றிய திருத்தலமாக இது அறியப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தம்பதியர் தங்களின் 60-ம் வயதில் செய்யும் சிறப்பு பூஜையின் வாயிலாக ஆயுள் நீட்டிக்கும் என்று நம்பப்படுகிறது. அபிராமி பட்டருக்கு அமாவாசையன்று முழுநிலவு காட்சியை அளித்தவள், இத்தல அபிராமி அன்னை. இந்தக் கோவிலில் மணிவிழா பூஜை செய்து கொண்டால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.