Home ஆன்மீக செய்திகள் மகாளய அமாவாசை 2021 எப்போது? – யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

மகாளய அமாவாசை 2021 எப்போது? – யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

by admin
mahalaya amavasai-மகாளய அமாவாசை 2021 எப்போது - யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்

மகாளயபட்சம் விரத காலம் இன்று புரட்டாசி 4ம் தேதி (செப்டம்பர் 21) தொடங்கி புரட்டாசி 20ம் தேதி (அக்டோபர் 6) வரை ஆகும்.

இந்த காலத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவனின் கடமை. இந்த பதிவில் யாரெல்லாம் மகாளயபட்சம் காலத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். என்பதை விரிவாக பார்ப்போம்.

மகாளய அமாவாசை எப்போது?

இந்து சமயத்தில் பல நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது இறை வழிபாடு மட்டுமல்லாமல், முன்னோர்கள் வழிபாடும் ஆகும். இந்த நம்பிக்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் நல்வழிப்படுத்துவதற்காகப் பின்பற்றப்படுகிறது.

அப்படி வகுக்கப்பட்டிருக்கும் பல நம்பிக்கைகளில் முன்னோர்கள் வழிபாடு ஒவ்வொரு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

மகாளயபட்சம் ஆரம்பம்:

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதம் ஆவணி பெளர்ணமி முடிந்ததும் மறு நாள் முதல் மகாளய பட்சம் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அனுசரிக்கப்படுகிறது. (இந்த முறை புரட்டாசி மாத பெளர்ணமிக்கு பின் மகாளயபட்சம் தொடங்கியுள்ளது.)

மகாளய அமாவாசை 2021: தர்ப்பணம், திதி, திவசம், சிரார்த்தம் என்றால் என்ன? – சாஸ்திரம் என்ன சொல்கிறது?

மகாளய அமாவாசை எப்போது? – Mahalaya Paksha Amavasya 2021 Date

இந்த மகாளய பட்சம் இன்று 21 செப்டம்பர் 2021 முதல் 06 அக்டோபர் 2021 வரை கடைப்பிடித்து, புரட்டாசி 20ம் தேதி (அக்டோபர் 6) அமாவாசை புதன் கிழமை அன்று மகாளய அமாவாசை தினத்துடன் முடிவடைகிறது.

அமாவாசை திதி அக்டோபர் 5ம் தேதி இரவு 7.04 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 6ம் தேதி (புரட்டாசி 6) மாலை 5.36 மணி வரை நீடிக்கிறது.

அதனால் அக்டோபர் 6ம் தேதி காலை முதல் மகாளய அமாவாசை கடைப்பிடித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

​முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை

முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை: Importance Of Mahalaya Amavasya

ஒவ்வொரின் தோஷங்கள் நீங்க, இறை வழிபாட்டில் முழு அருளைப் பெற்றிட முன்னோர்கள் வழிபாடு செய்வது அவசியம். யார் ஒருவர் இறை வழிபாடு செய்வதோடு, தன் முன்னோர்களுக்கான கடமைகளை சரியாக வழிபட்டு செய்கிறாரோ அவரின் வாழ்வில் அனைத்து நன்மைகளும் நடக்கும்.

ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு, அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டியது அவசியம்.

அமாவாசை தினத்தில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்கள் விரதம் இருக்க வேண்டுமா? யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முழு விபரம் : அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?: ஆண், பெண்களுக்கான விரத முறை

​மூன்று முக்கிய அமாவாசை :

மூன்று முக்கிய அமாவாசை :

மாதம் ஒரு அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி அமாவாசை), தை அமாவாசை மிக விஷேசமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும். இந்த மூன்று முக்கிய அமாவாசை தினத்திலாவது உங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

மகாளய பட்சம் சிறப்புகள்: கர்ணன் அன்னதானம் செய்ய மீண்டும் பூமிக்கு வந்த கதை

ஆடி அமாவாசை : பித்ரு லோகத்திலிருந்து பித்ருக்கள் பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம்.

மகாளய அமாவாசை : பித்ருக்கள் பூலோகம் வந்தடைவதாக ஐதீகம்.

தை அமாவாசை : பித்ருக்கள் மீண்டும் பித்ரு லோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம்.

வீட்டிலேயே ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதற்கான மந்திரம் மற்றும் செயல்முறை

​முன்னோர் வழிபாடு செய்வது எப்படி?

முன்னோர் வழிபாடு செய்வது எப்படி? – How To Worship On Mahalaya Amavasya

ஒருவர் இறந்த அதே திதியில், அடுத்து வரக்கூடிய காலத்தில் (ஆண்டில்) திதி கொடுப்பதற்கு சிரார்த்தம் என்று பெயர்.

திவசம் (தெவசம்) என்றால் ஒருவர் இறந்தால், அவர் எந்த மாதத்தில், எந்த திதியில் இறந்தாரோ, அந்த மாதம், அதே திதியில் (தசமி திதி என்றால் அந்த மாதம் தசமி திதி) பிராமணரை அழைத்து, திவசத்திற்கான விரிவான சடங்கும், ஹோமமும் வளர்த்து செய்வதாகும்.

Pitru Paksha: முன்னோர்களின் ஆசியை பெற மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டியதும் – செய்யக் கூடாததும்

தர்ப்பணம் என்பது ஒரு புண்ணிய செயல். ஒவ்வொரு நாளும் செய்யலாம். நீர்நிலையில் நின்று சூரியன், வருணன் என எல்லா தேவர்களை நினைத்து தண்ணீரை அள்ளி விட்டு ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வது தர்ப்பணம் ஆகும்.

தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்று பொருள்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் அமாவாசை தினத்தில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த தினத்தில் நீங்களே எள்ளும் நீரும் கலந்து உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

இது உங்கள் முன்னோர், ரத்த உறவு சார்ந்தோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆகும்.

You may also like

Translate »