Home ஆன்மீக செய்திகள் ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

by admin
Pariharam-Astrology_ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்யவேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப்பெருமானுக்கு கட்டுப்படும்.

சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும்.

 முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.

இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப்பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களை வணங்கி தொடங்கினால் தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும்.

விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன்நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது.

நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனி சிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிபடுங்கள். அவர்கள் நம் அன்புக்கும் வழிபாட்டுக்கும் கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளிதருவார்கள்.

You may also like

Translate »