Home ஆன்மீக செய்திகள் குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

by admin
Thiruchendur-Murugan-Temple_குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.

ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.

ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

You may also like

Translate »