Home ஆன்மீக செய்திகள் கடன் பிரச்சனை தீர பைரவருக்கு 9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்யுங்க…

கடன் பிரச்சனை தீர பைரவருக்கு 9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்யுங்க…

by admin
Debt-Pariharam-Bhairava-pooja_கடன் பிரச்சனை தீர பைரவருக்கு 9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்யுங்க...

கடன் பிரச்சனை என்பது நமது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு இல்லாமல் செய்து விடுகிறது. கடன் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு. இதனால் கடன் பிரச்சினையைத் தீர்க்கும் பைரவர் பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு சுத்தமான வெள்ளை நிற துணியில் 27 மிளகுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய மூட்டை போல கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்னர் பைரவரை நினைத்து அவர்கள் மந்திரங்களை சொல்லியவாறு பிரார்த்தனை செய்து வாருங்கள்.

அதேபோல் மாலையில் பைரவர் சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வாருங்கள். பைரவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் காலபைரவர் என்று சொல்வதுண்டு. கோடி கோடியாக எவ்வளவு கடன் இருந்தாலும் கால பைரவரை வணங்கி வரும் நிலையில் அந்தக் கடன்கள் அனைத்தையும் பைரவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். நமது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தியும், ஆற்றலும் பைரவ பகவானுக்கு உள்ளது. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடித்து வைத்து நன்கு நனைத்து தீபமேற்றி பைரவர் அஷ்டகம் வாசித்தால் போதுமானது. ஒன்பது வாரங்களில் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

You may also like

Translate »