Home ஆன்மீக செய்திகள் கடன் பிரச்சனையா?… வீட்டில் செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள்..

கடன் பிரச்சனையா?… வீட்டில் செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள்..

by admin
Debt-Pariharam-vastu-changes-in-home_கடன் பிரச்சனையா. வீட்டில் செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள்..

வீட்டின் வடக்கு பகுதியில் தடைகள் இருப்பது வீட்டில் கடன் பிரச்னையை ஏற்படுத்தும். வடக்கு திசையில் காற்று உள்ளே வருவதற்கு தடை அல்லது மிக சிறிய அளவில் வழி ஏற்படுத்துவது வாஸ்து பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

வடக்கு பகுதியில் கற்கள், செங்கல், குப்பைகள், பழைய பொருட்கள் என எதையும் போட்டு வைக்க வேண்டாம். இது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும், கடன் பிரச்னைகளில் சிக்க வைத்துவிடும்.

மாடி வீடு கட்டும்போது வடக்கு பகுதியில் முழுவதும் கட்டுமானத்தை ஏற்படுத்திவிட்டு, தெற்கு பகுதியில் திறந்த வெளியாக விடுவதும் குடும்பத்தில் கடன் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

வீட்டின் ஓவர் டேங்க் (தண்ணீர் தொட்டி) தென் மேற்கு திசையில் அமைப்பதும் கடன் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். இவற்றை சரி செய்வதன் மூலம் கடன் பிரச்னையில் இருந்து தீர்வு காணலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வீண் வழக்கு பிரச்னை, சட்ட ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது என்றால் வட கிழக்குப் பகுதியில் பிரச்னை இருக்கலாம். குறிப்பாக தொழில் நிறுவனங்கள் ஒரு பிரச்னை முடிந்தால் அடுத்து ஒரு பிரச்னை வந்து துவண்டுவிடுகின்றன. இதை சரி செய்ய வடகிழக்கு பகுதியில் வெப்பத்தை ஏற்படுத்தும் உபகரணங்களை வைக்க வேண்டும்.

வட கிழக்கு என்பது அக்னி பகவானுக்கு உரிய இடம் ஆகும். அந்த இடத்தில் தண்ணீர் தொட்டி, ஆழ் துளை கிணறு போன்றவற்றை அமைக்கக் கூடாது. அது நெருப்புக்கு உகந்தது இல்லை.

எல்லாம் சரியாக இருந்தும் கடன் பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்துவும் முக்கிய காரணமாக இருக்கலாம். தெற்கு பகுதியை மேடாக்க அல்லது உயரமாக மாற்றுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். தென் பகுதி சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரித்தால் கூட போதுமானது. தெற்கு திசையில் கட்டப்படும் அறைகள் வடக்கு திசையைக் விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

மழை நீர் வடக்கு திசை நோக்கி பாய்ந்து வெளியேறுவது வீட்டுக்கு செல்வச் செழிப்பைத் தரும். வடக்கு பகுதியில் திறந்த வெளி இருப்பது நல்ல செழிப்பைத் தரும்.

தெற்கு பகுதியில் மிகக் குறைந்த அளவில் இடத்தை விட்டும், வடக்கு பகுதியில் அதிக இடத்தை விட்டும் கட்டுமானத்தை மேற்கொள்வது நிதி ஆதாரத்தை அதிகரிக்கச் செய்யும்.

You may also like

Translate »