Home ஆன்மீக செய்திகள் இரட்டை விநாயகர் விரத வழிபாட்டு பலன்கள்

இரட்டை விநாயகர் விரத வழிபாட்டு பலன்கள்

by admin
rettai-vinayagar-இரட்டை விநாயகர் விரத வழிபாட்டு பலன்கள்

ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போது விரதம் இருந்து சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டைப் பிள்ளையார்கள் செய்து வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கும்.

ஒவ்வொரு மாத சதுர்த்தியின் போது விரதம் இருந்து தம்பதியர்கள் இரட்டைப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அந்தக் கொழுக்கட்டையை பக்தர்களுக்கு தானமாகக் கொடுத்தால் தங்கம் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரத்தின் போது விரதம் இருந்து இரட்டைப்பிள்ளையாருக்கு பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, இரண்டு மாம்பழங்களை ஏழ்மை நிலையில் உள்ள தம்பதியர்க்கு தானமாகக் கொடுத்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து இரட்டைப் பிள்ளையாரை வழிபடுபவர்கள் லட்சுமியின் அருளுக்குப் பார்த்திரமாவார்கள். இரட்டை விநாயகரை தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

You may also like

Translate »