சிலாத முனிவரின் தவத்தின் பயனாக காட்சி கொடுத்த ஈசன் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி நிலத்தை உழுதால் உனக்கு மகன் கிடைப்பான் என்று வரமருள, அப்படி செய்து நிலத்தை உழுத பொழுது அதிலிருந்து தோன்றியவரே ஜபேசன் என்ற செப்பேசன் என்ற நந்திதேவர், இவருக்கும் வியாக்பாரத முனிவரின் மகளான சுயம்பிரகாசைக்கும் திருமணம் திருமழபாடியில் நடைபெற்றது,
இந்த நந்தி கல்யாணத்தை பார்ப்பவருக்கு முந்தி கல்யாணம் என்ற சொல் வழக்கில் உள்ளது.நந்திதேவர் என்பவர் பிரம்மா என்பதை இதற்கு முன்பு கட்டுரையிலும் நாம் பார்த்து உள்ளோம், பிரம்மாவின் மனித உடலில் இரு புருவத்தின் நெற்றியின் மத்தியில் ஜோதியாக பிரவேசிக்கும் தந்தை சிவபெருமான்,இந்த உலகத்திற்கு நன்மை செய்ய தர்மம் நிறைந்த வழியில் செல்வதற்கான ஞானத்தை கொடுக்கின்றார். நந்தி தேவர் உடலில் உடலற்ற ஜோதியாக பிரவேசிக்கும் சிவபெருமான், பிரம்மாவிற்கும் நீங்கள் உடல்அல்ல ஜோதியான சுயம் பிரகாசிக்கும் ஆன்மா என்ற அறிமுகத்தை கொடுக்கின்றார்.இந்த நன்மையான விஷயம் உலக நன்மையின் பொருட்டு அதாவது கல்யாணம் என்பதற்கு நன்மை என்று அர்த்தமாகின்றது.இந்த கல்யாணம் நந்தி தேவர் என்ற பிரம்மாவிற்கு முதலில் நடந்தது. தந்தை சிவபெருமான் உத்தரவு படி சுயம் பிரகாசிக்கும் ஆன்மா என்று உணர்ந்ததே சுயம்பிரகாசையை நந்திதேவர் மணம் முடித்ததாக காட்டப்பட்டு உள்ளது.முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதன்மையாக இந்த நன்மை நந்தி எனப்படும் பிரம்மாவிற்கு நடந்தது.அதனால் நந்திக்கு முந்தி கல்யாணம் எனும் நன்மை நடந்தது. இதனால், ஜோதி சொரூபமான தந்தை ஈசனிடமிருந்து நந்தி கேஸ்வரர் பட்டத்தை பிரம்மா பெற்றார். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பூத கணங்களுக்கு நந்தி தலைமை தாங்கினார், காம,கோப,லோப,மோக, அகங்காரத்தை அர்ப்பணித்தால் அவர் தேவ கணம், அவற்றை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இறைவனை வணங்கி தொழுது கொண்டிருந்தால்அவர் பூத கணம்.இந்த விஷத்தை ஈசனுக்குஅர்ப்பணித்து தேவகணம் ஆகவேண்டும் என்பதே தந்தை ஈசனின் விருப்பமாகும்,இறைவன் பிரம்மாவின் நெற்றியில் ஜோதியாக அமர்நது ஞான அமிர்தத்தை கொடுத்தே திரு நடனமாக குறிப்பிடப்படுகின்றது.முப்பது முக்கோடி தேவர்களும் பிரதோஷத்தில் கலந்து கொள்ளும் பொழுது பெருமாள் கோவிலில் மட்டும் நடை சாத்தப்படுவது ஏன்?பெருமாள் கைலாயம் சென்று விடுவதாக ஐதீகம் உள்ளதாக குறிப்பிட்டாலும்.நந்தி தேவராக நாம் குறிப்பிடும் பிரம்மாதான் ஜோதியான தந்தை ஈசனின் வழியில் நடந்து பெருமாளாக மாறுகின்றார். இன்றும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ நாராயணன் கையில் ஒரு சிவலிங்கத்தை காணலாம்.ஸ்ரீ நாராயணின் இறுதி பிறவி சிருஷ்டியில் பிரம்மா என்பதை நிரூபிக்க அவரது தொப்புள் கொடியில் பிரம்மா தாமரை மலர்மீது அமர்ந்திருப்பதை காணலாம் அந்த பிரம்மாதான் நந்திதேவர் என்று உணர நெற்றியில் பட்டையணிந்து சிவ சின்னத்துடன் அவர் இருப்பதை காணலாம்.பிரதோஷ நடனத்தை அணைத்து தெய்வங்களும் காண சென்றால், அணைத்து கோவில்களின் நடை சாற்றுவதுதானே முறை, பெருமாளின் கோவிலில் மட்டும் நடை சாத்தப்படுவதன் அர்த்தம் ஜோதியான தந்தை சிவபெருமானின் வாகனமே பெருமாள்தான்.இதனால்தான் ஹரியும், சிவனும் ஒன்னு என்று சொல்லி வைத்தனர். மனதில் திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் நந்தியின் திருக்கல்யாணத்தை பார்த்தால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர் தந்தை ஈசன் தான்.ஆனால்,அதே ஈசன் சுந்தரர் திருமணத்தை தடுத்தாட்கொண்டார் ஏன்?
சம்சார பந்தம் கடலை போன்றது, அதில் மனதை ஈடுபடுத்தினால் ஈசனை நினைக்க எங்கே நேரம்.எனவே, தந்தை ஈசனுக்காக வாழ்வதே முந்தி கல்யாணம்.அதை நந்தி எனும் பிரம்மா சுயம் பிரகாசமான ஆத்மா என உணர்ந்து பிரகாசமான தந்தை உடலற்ற பரமாத்மா ஜோதியான ஈசனுடன் அவர் நினைவிலேயே வாழ்ந்து முக்தி எனும் கைலாயத்தையும், ஜீவன் முக்தி எனும் வைகுண்டத்தை அடைந்தார். நாமும் அவரை பின்பற்றி ஆத்மாவாகிய நாமும் ஈசனை முந்தி கல்யாணம் செய்வோம். தீய விஷமான குணங்களை தந்தை ஈசனிடம் அர்ப்பணித்து பூதகணத்திலிருந்து தேவகணம் ஆவோம், இதுவே நந்தி கல்யாணம், முந்தி கல்யாணம் ஆகும்.வாழ்த்துக்கள்.தந்தை ஈசனிடம் இருந்து முக்தி, ஜீவன் முக்தி எனும் நன்மையை முந்தி பெற அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தை அணுகி இலவச ராஜயோகத்தை கற்று மகிழ்வோம். வாழ்த்துக்கள்.ஓம் சாந்தி…