205
மற்றவர்களிடம் உள்ள திறமைகள் போல் நமக்கில்லையே என ஏங்காதீர்கள்..
இங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான திறமைகள் உண்டு..
பூக்களிலே மனமற்ற பூக்கள் உண்டு..
அவை இறைவனடி சேர்வதும் உண்டு..
அழகில்லா குயிலுக்கு அருமையான குரல் உண்டு..
அழகில்லா குரல் கொண்ட மயிலுக்கு அட்டகாசமான தோகை உண்டு..
உலகுக்கே ஒளி தரும் சூரியனுக்கு நிழல் இல்லை..
நம்மை வாழவைக்கும் சுவாசத்திற்கு உருவம் இல்லை..
நீரின்றி அமையாது உலகு என்றுரைத்த நீருக்கு நிறமில்லை..
இங்கு எவர் வாழ்விலும் குறையை மட்டுமே கொண்டில்லை..
எவர் வாழ்விலும் நிறையை மட்டுமே கொண்டில்லை…
மகிழ்வுடன் வாழுங்கள் அனைத்தும் கலந்ததே வாழ்க்கை…