Home ஆன்மீக செய்திகள் பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்

by admin
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்

கலியுகத்தில் ஊழ்வினையால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் இதர பிரச்சனைகளுக்கும் கண்கண்ட மருந்தாய் இருந்து அவர்களை காத்து இரட்சிப்பதில் ‘பன்னிரு திருமுறைகள்’ எனப்படும் சிவாகமங்களின் பங்கு மகத்தானது. அளப்பரியது.

 அதன் அருமை உணர்ந்தவர் எத்தனை பேரோ என்று நமக்கு தெரியாது. ஆனால் உணர்ந்துகொண்டவர்கள் பாக்கியசாலிகள். அதிர்ஷ்டசாலிகள். (ஏனெனில், சுலபமாய் கிடைக்கும் எதன் அருமையும் நமக்கு தெரியாது!)

எத்தனை தான் திருந்த வேண்டும் என்று நாமாக விரும்பினாலும் நமக்குள்ள அறியாமை காரணமாக , திரும்பத் திரும்பத் தவறுகளை நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் .

அந்த அறியாமையிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் துணை செய்கின்றன .

இறைவன் , வினைவயபட்டுத் துன்பப்படும் நாம் அனைவரும் , திருந்தி உய்யும் பொருட்டு , அருளாளர்களை இப்பூவுலகற்கு அனுப்பி , அவர்கள் வாயிலாக நமக்குத் தன் அருளிப்பாடுகளை செய்துள்ளான் .

 அருளாளர்களை அதிட்டித்து நின்ற , இறைவனே திருவாய் மலர்ந்து அருளிய சொற்களே திருமுறைகளில் உள்ளன . இவ்வுண்மையை எனது உரை தனது உரையாக என்று அருளிச் செய்துள்ள சம்பந்தப் பெருமான் திருவாக்கிலிருந்து அறியலாம் .

 திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது . எனவே , திருமுறைகளை நாம் பாராயணம் செய்யும் போது , அதில் உள்ள மந்திர ஆற்றல் , நமது உயிரில் கலந்து , நமது அறியாமையை போக்கும் திறன் உடையது.

வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக் கொள்ள முடியுமா?

 இறைவனாலும் மாற்றியமைக்க முடியாதது விதி என்றால், அது இறைவனின் இறைத் தன்மையையே கேள்விக்குரியதாகச் செய்யும். இறைவனாலும் கூட விதியை மாற்ற முடியாது என்றால், நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டு விடும்.

 பிரார்த்தனைகளுக்கு அங்கு இடமே கிடையாது. வழிபாட்டில் ‘காம்ய வழிபாடு’, ‘நிஷ்காம்ய வழிபாடு’ என்று இரு வகையுண்டு. எதையேனும் வேண்டிப் பெறுதலுக்காகச் செய்யப்படுவதே ‘காம்யம்’. இறைவன்பால் அன்பால் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்யப்படுவது, ‘நிஷ்காம்யம்’. ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடுவராத நட்பும்’, என்ற பாடலில் அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டு பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.

இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி, சுப்பிரமணிய பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். இதையெல்லாம் அடைய உனக்கு விதியில்லை. ஆகவே நீ கேட்பது எதையுமே என்னால் தர இயலாது”, என்று கூறினால், எப்படியிருக்கும்? விதி என்றிருந்தால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா? விதியிலிருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான் இறைவன்.

கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில்,

“கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,

குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே! ”

கதி என்பது மாற்றப்பட முடியாத . விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடிய அம்சம். விதியை, மதியால் பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான்.

பன்னிரு திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாய் இருந்தவர் திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி. நம்பி மட்டும் இல்லையேல் நமக்கு திருமுறை கிடைத்திருக்காது.

நமசிவாய வாழ்க

You may also like

Translate »