Home அதிர்ஷ்டம் உங்களுக்கு ஏற்படும் பலவிதமான பண பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும், ‘படிகாரம்’. மறைக்கப்பட்ட ரகசிய குறிப்புகள்.

உங்களுக்கு ஏற்படும் பலவிதமான பண பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும், ‘படிகாரம்’. மறைக்கப்பட்ட ரகசிய குறிப்புகள்.

by admin
padikaram- ‘படிகாரம்’ மறைக்கப்பட்ட ரகசிய குறிப்புகள்

பொதுவாகவே இந்த பரிகாரத்தை கண் திருஷ்டி படாமல் இருக்க பயன்படுத்துவார்கள். வீட்டிற்கு முன்போ அல்லது தொழில் ஸ்தாபனத்தின் முன்போ பெரிய படிகாரங்களை, கருப்பு கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், கெட்ட சக்திகள் எதுவும் உள்ளே வராது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. கண் திருஷ்டியும் அண்டாது. இயற்கையாகவே இந்த படிகாரதிற்க்கு தண்ணீரை சுத்தப்படுத்தும் தன்மையும் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இவை தவிர நமக்கு இருக்கும் பல வகைப்பட்ட பண பிரச்சனைகளையும் இந்த படிகாரம் தீர்த்து வைக்கும் என்று சில குறிப்புகள் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன குறிப்புகள் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கடனாக கொடுத்த பணம் எதுவும் வசூல் ஆகவில்லை. கையில் பணம் இருந்தும் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள், படிகாரத்தின் சிறு துண்டை, சிகப்பு துணியில் கட்டி உங்கள் வீட்டு வாசப்படிக்கு வெளிப்பகுதியில் மாட்டி விட வேண்டும். மிகப் பெரிய அளவு படிகாரத்தை கட்ட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சிறு துண்டு பரிகாரமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் சிவப்புத் துணியில் கட்டிய, அந்த முடிச்சினை அனைவரின் பார்வைக்கு தெரியும் படி கட்டி தொங்க விட வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் கடன் வசூல் ஆகவில்லை என்றாலும், வீட்டில் பண வரவிற்கு பிரச்சனையாக இருந்தாலும் இந்த முறையை பின்பற்றலாம். உங்களுக்கு வரவேண்டிய பணவரவு எந்த ஒரு தடையும் இல்லாமல் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.

இரண்டாவதாக நீங்கள் அதிகப்படியான கடனை வாங்கிவிட்டு திருப்பி தர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தால், சிறிய அளவு படிகாரத்தை எடுத்து கருப்பு துணியில் கட்டி, நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் கட்டலாம். உங்கள் கடையிலும் கட்டலாம். அல்லது உங்கள் வீட்டிலும் கட்டிக்கொள்ளலாம். எது உங்களுக்கு சவுகரியமாக இருக்குமோ அந்த இடத்தில் இந்த முடிச்சினை வாசலின் முன் பகுதியில் கட்டி  தொங்க விட்டு விடுங்கள். கடன் பிரச்சனை விரைவில் தீர வழி கிடைக்கும்.

சில பேருக்கு தீர்க்கவே முடியாது என்று சொல்லி பரம்பரை பரம்பரையாக, காலம் காலமாக சில கடன்களை வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டு, அதில் சிறிய துண்டு படிகாரத்தை வைத்து, ஒரு பொட்டு குங்குமம் வைத்து, வெற்றிலையை மடித்து, அரசமரத்தடியில் புதைத்து வைத்துவிட்டு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை மூன்று வாரம் தொடர்ந்து புதன்கிழமை அன்று செய்துவர வேண்டும். இப்படி செய்தால் தீர்க்க முடியாத கடனை தீர்ப்பதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

இரவு நேரத்தில் தூங்கும் போது அதிகப்படியான கெட்ட கனவுகள் சில பேருக்கு வரும். இதற்க்கு சிறிய அளவு படிகாரத்தை கருப்பு துணியில் கட்டி, தலையணை அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவு வராமல் தடுத்துவிடலாம். இது தவிர எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மிடம் அண்டாமல் இந்த ஒரு சிறிய பரிகாரதுண்டு பாதுகாக்கும்.

இதேபோல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டால் கண் திருஷ்டியானது முழுமையாக நீங்கி, வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடையலாம். நம் முன்னோர்கள் செய்து வந்த பரிகாரங்கள் தான் இவை அனைத்தும். காலப்போக்கில் மறைந்து விட்டதே தவிர, இதனுடைய ஆற்றல் இன்றளவும் அப்படியேதான் உள்ளது.

You may also like

Translate »