கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் நம்முடைய நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ‘இந்த வைரஸின் தாக்கம் எப்போதுதான் நம்மை விட்டு முழுமையாக விலகும்’? இந்தக் கேள்விக்கான பதிலைத் தான் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சமயத்தில் மன அமைதியையும், மன ஆறுதலையும் பெற வேண்டுமென்றால் கட்டாயம் அது இறைவழிபாட்டின் மூலம் தான் முடியும். கொரோனா வைரஸால் தனிமை பட்டவர்களாக இருந்தாலும், வைரஸின் பாதிப்பு நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்களாக இருந்தாலும், தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வீட்டில் இருந்தே, எப்படிப்பட்ட இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு கண்ணுக்கு தெரியாத கிருமிகயாக இருந்தாலும், மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் அதன் தாக்கமானது கட்டாயமாக குறையும். அதிலும் குறிப்பாக, விஷ்ணு சஹஸ்ரநாமம், கிருஷ்ணருடைய பாடல்கள், கணபதியின் மந்திரங்கள், இப்படிப்பட்ட பாடல்கள், மந்திரங்களை உங்களால் உச்சரிக்க முடியவில்லை என்றாலும், அதை ஒலிக்கச் செய்து காதுகளில் கேட்பதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும் என்று கூறுகிறது ஆன்மீகம். அதிலும் குறிப்பாக அபிராமி அந்தாதியில் நோய்கள் விலகுவதற்காக சொல்லப்பட்டிருக்கும் இந்தப் பாடல் மிகவும் சிறப்பான ஒன்று. அந்த பாடல் உங்களுக்காக இதோ..
நோய்கள் விலக:
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
இந்த பாடலை தினம்தோறும் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார 108 முறை உச்சரிக்க வேண்டும். நம் உடம்புக்குள் இருக்கும் நோய் விலக வேண்டும் என்றாலும் சரி. நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி. ஆன்மீகத்தின் இது ஒரு நல்ல மருந்து.
அடுத்ததாக, எப்படிப்பட்ட உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் முருகன் வழிபாடு மிகவும் சிறந்தது. முருகப்பெருமானை மனதில் நினைத்து காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம் கேட்பது, முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலனை தரும்.
இதுமட்டுமல்லாமல் நோய்கள் விலகுவதற்கு வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசுநெய் இந்த நான்கையும், கலந்து ஏற்றப்படும் தீபத்தின் மூலம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழியும் என்பது நம்முடைய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீபத்தை வீட்டு வாசலில் காலை வேளையிலும், மாலை வேலையிலும் ஏற்றுவது நல்ல பலனைத் தரும். கொரோனாவின் அச்சத்தால், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நமக்கு ஆன்மீகம் ஒன்று மட்டுமே ஆறுதல். அனைவரும் இறைவனை மனதார பிராத்திப்போம். இந்தப் பிரச்சனையில் இருந்து விரைவாக ‘இந்த உலகத்தை விடுவிக்க வேண்டும்’ என்று நாம் எல்லோரும் எழுப்பும் இந்தக் குரல் அந்த ஆண்டவனின் செவிகளில் விழாமலா போய்விடும்!