Home அதிர்ஷ்டம் இந்த மந்திரத்தை சொன்ன க்ஷணத்தில் பலன் கிட்டுமாம்!

இந்த மந்திரத்தை சொன்ன க்ஷணத்தில் பலன் கிட்டுமாம்!

by admin
slogam-நற்பவி...

நற்பவி…

என்றால் மிக உயர்ந்த மந்திரம் ஆகும்.

இந்த மந்திரத்தை அருளியது காகபுஜண்ட மகரிஷி. பண்டைய நூல்களில் இந்த மந்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் இது ஒரு மோகன மந்திரம் ஆகும் நற்பவி நற்பவி நற்பவி என்று சொல்லிக்கொண்டே இருக்க உங்கள் கஷ்டங்கள் மட்டுமல்லாது உலக மக்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நற்பவி என்றால் நல்லது உண்டாகட்டும் நல்லது நடக்கட்டும் என அர்த்தம் ஆகும்.

புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழியா பேரின்ப நிலையை அடைய “நற்பவி”பேருதவியாக இருக்கும் என மகிரிஷி காக புஜண்டர் அருளுகின்றார். இதை எப்ப வேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும். இந்த மந்திரம் ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்க்கு இணையானது என்பதால் இதை எல்லோரும் கார், வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்று கொள்ளலாம்.

கருணைமலை காகபுஜண்டர் அருள் வாக்கு ”நற்பவி”. இது நிர்விகல்ப சமாதியிலிருந்து கிடைத்த ஒரு மோகன அஸ்திரம். இதை சப்தத்தோடு உச்சரிக்க எல்லா தீமைகளும் ஓடோடி போகும் அல்லது ஒடுங்கி போகும். இதன் அர்த்தம் நல்லது பலிக்கட்டும் அல்லது நல்லது உண்டாகட்டும் என்பதே!

ஆதலால் இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி எங்கெங்கும் எவ்வெவர்க்கும் நன்மையே உண்டாகும். மேலும் அவரவருடைய உஸ்வாசத்தை புருவ மத்தியிலுள்ள ஏழு சூஷ்ம திரைகளையும் கடந்து செல்லுமாறு செய்து ஆங்கு பிரம்மரத்தித்திலுள்ள அழியாதனத்தை அடையச்செய்து அழியாததும் மாறததுமான இந்திர போகத்தையும் அளித்துதவும்.

நற்பவி! நற்பவி!! நற்பவி!!! என்று சொன்ன ஷணத்தில் இருந்து மகரிஷி காக புஜண்டர் நம் குறைகளை போக்கி அருள்வார் என்பது அவர் வாக்காலேயே அறியப்படுகிறது.

You may also like

Translate »