பக்கத்து வீட்டில் இருக்கும் பணமானது, தானாக உங்கள் கைக்கு வந்து விடும் என்பது இதற்கு அர்த்தமில்லை. நமக்கு சேர வேண்டிய பணம், நியாயமான முறையில் வரவேண்டிய பணம் வராமல் இருந்தாலும், பணத்தட்டுப்பாடு இருந்தாலும், பணப்புழக்கம் சீராக இருக்க வேண்டும் என்றால் சின்ன சின்ன பரிகாரங்களை செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. நம் வீட்டில் இருக்கும், பணத்தை ஈர்க்கும், சில பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இந்த பரிகாரமானது உங்களது மனதை நேர்மறை ஆற்றலுக்கு கொண்டு சென்று, மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வழி வகுக்கும். மன அழுத்தமும், மனக்குழப்பமும் இல்லாமல் இருந்தாலே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து விடலாம். மன அழுத்தம் இல்லாமல் எடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடையலாம். வெற்றியடைந்த விஷயத்திலிருந்து வருமானத்தை சுலபமாக பார்த்துவிடலாம். நீங்களும் இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து தான் பாருங்களேன்!
இதற்கு தேவையான பொருட்கள். செம்பு பாத்திரத்தை உயரமான அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதாவது படி வடிவத்தில் இருக்கவேண்டும். (அரிசி அளக்க பயன்படுத்துவார்கள் அல்லவா படி), பச்சரிசி, உங்கள் கையில் இருக்கும் நாணயங்கள். நீங்கள் வாங்கி வைத்துள்ள செம்பு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, அதன்மேல் நாணயம். திரும்பவும் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, அதன்மேல் நாணயங்கள். இப்படி ஐந்து அடுக்குகள் பச்சரிசியும் ஐந்து அடுக்குகள் நாணயங்களையும் போட்டு அந்தப் பாத்திரத்தை நிரப்பி கொள்ள வேண்டும். இத்தனை நாணயங்கள் தான் போடவேண்டும் என்பது அவசியம் இல்லை. சில பேர் வீடுகளில் செல்லாத பழைய நாணயங்களை வைத்திருப்பார்கள் இதை அரிசியில் போட்டு வைத்தால் இன்னும் சிறப்பானது.
நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொருட்களை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை அரிசியை மட்டும் பறவைகளுக்கு உணவாக போட்டுவிட்டு, புது அரிசியை வைத்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு நாள் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாத்திரத்தின் அருகில் ஒரு பச்சைநிற மெழுகுவர்த்தியையோ, அல்லது மஞ்சள் நிற மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு ஒரு பதினைந்து நிமிடங்கள் அந்த மெழுகுவர்த்தியின் தீப ஒளியை பார்த்து மன அமைதியோடு தியானம் செய்தால் போதுமானது.
பச்சரிசியிலும், நாணயத்திலும் லட்சுமிகடாட்சம் நிறைந்துள்ளது. இதனருகில் கரையக்கூடிய மெழுகுவர்த்தியில் தீபம் ஏற்றி தியானம் செய்வது நல்ல பலனை நமக்கு தரும். இப்படி தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வரும் போது நம்மால் நல்ல மாற்றத்தை உணர முடியும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். பணம் உங்கள் கைக்கு வந்து சேர்ந்து விட்டது என்றே நினைத்துக் கொள்ளலாம். நேர்மறை எண்ணமானது, நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கி நல்ல வாழ்க்கையை நமக்கு தரும். பரிகாரங்கள் செய்வதோடு உங்களது முயற்சிகளையும் கைவிடாமல் செய்து வாருங்கள். பரிகாரங்களை மட்டும் செய்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறுவது விதண்டாவாதம்.