பல்வேறு ஆன்மீக நூல்கள் ரகசியமாகவே வைக்கபட்டுள்ளன. அத்தகைய நூல்களில் பலவற்றை பலர் நல்ல காரியங்களுக்காகவும், ஒரு சிலர் தீய விஷயங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது போன்ற நூல்களில் ‘மஹா மந்திர போதிணி’ என்ற ஒரு அற்புதமான ரகசிய நூலும் ஒன்றாகும். இந்நூலில் மனித பிறவிக்கு தேவையான அனைத்து ஆன்மீக குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மனிதனாக பிறக்கப்பட்டவன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான். அதற்கு காரணம் அவனது கர்ம வினையாகும். தெரியாமல் செய்கின்ற தவறுகளுக்கும் மனிதனாகபட்டவன் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். சில எளிய பரிகாரங்கள் மூலம் அத்தகைய துன்பங்களிலிருந்து விடுபட்டு நல்லதொரு வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இந்த ‘மகா மந்திர போதினி’ என்கிற நூல் திடீரென்று ஏற்படும் இன்னல்களுக்கு பரிகாரம் கூறுகிறது. அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்துக் கொள்ள இப்பதிவை தொடரலாம்.
உங்களுக்கு ஒரு சில நேரத்தில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். குறிப்பிட்டு அந்த நேரத்தை எதிர்கொள்வதற்கு போராட வேண்டியிருக்குமே என்று மனம் நிலை கொள்ளாமல் இருக்கும். இந்த பிரச்சனை இப்போது தான் வரவேண்டுமா? சில மாதம் கழித்து வரக்கூடாதா? சமாளித்து இருப்பேனே? என்று கையை பிசைந்து நிற்கும் நிலை உருவாகும். அது பண தேவையாக இருக்கலாம். பொருள் தேவையாக இருக்கலாம். வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் போயிருக்கலாம். எனவே இக்கட்டான அந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு வழி தெரியாமல் இருக்கும். அப்படியான ஒரு சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய வகையில் தான் இந்த பரிகாரம் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடிவிட்டு அன்றாட பூஜை செய்தபின் மொச்சை கொட்டைகளை 20 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு சர்க்கரை போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். மொச்சை கொட்டைகள் முழுமையாக இருக்க வேண்டும். குழைந்து போகக்கூடாது. அந்த அளவிற்கு வந்த பின் அவற்றை எடுத்து வடிகட்டி தனியே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 20 மொச்சைகளையும் ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியில் லேசாக கட்டிக் கொள்ளுங்கள். கட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். கட்டு இறுக்கமாக இருக்கக் கூடாது. மிகவும் தளர்வாக கட்டிக் கொள்வது நல்லது. பின்னர் இந்த மந்திரத்தை ஆறு முறை கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு உச்சரிக்கவும். பின்னர் அதனை நீர்நிலைகளில் கொண்டு போய் போட்டு விடலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய வேண்டும். காலை 6 லிருந்து 7 க்குள், மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள், இரவு எட்டிலிருந்து 9 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் செய்யலாம். மிகவும் எளிய ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின் உங்கள் கண் முன்னே இருக்கும் இக்கட்டான பிரச்சனைகள் விரைவில் தீர்வுக்கு வரும்.
மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி! ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ!
இதை செய்து பார்ப்பதால் எந்த கெடு பலன்களும் வந்து விடப் போவதில்லை. நம்முடைய பிரச்சினைகள் தீர்ந்தால் போதும் தானே. நாம் எவ்வளவு தான் பிறருக்கு நன்மைகள் செய்தாலும் நமக்கு ஒரு கஷ்டம் என்று வரும் போது அவர்களில் ஒருவரும் உதவிக்கு முன் வந்து நிற்க மாட்டார்கள். அப்போது நம் கண்களுக்கு கடவுள் மட்டுமே தெரிவார். எந்த பரிகாரத்தையும் முழு நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் செய்ய வேண்டும். இல்லை என்றால் செய்யவே கூடாது. ஆறு வாரத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அது கட்டாயம் நிறைவேறிவிடும். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் நீங்கள் செய்த புண்ணிய வினைகளால் நெருக்கடியான பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியுடன் வாழலாம்.