Home Uncategorized பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்..

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்..

by admin
srivanjiyam-temple_பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்..

கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம்.

இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும்.

இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.

You may also like

Translate »