Home 27 நட்சத்திரம் ஆனிமாத உத்திர நட்சத்திரம்- விரதம் இருந்து செய்ய வேண்டியவை

ஆனிமாத உத்திர நட்சத்திரம்- விரதம் இருந்து செய்ய வேண்டியவை

by admin
aani-thirumanjanam-viratham_ஆனிமாத உத்திர நட்சத்திரம்- விரதம் இருந்து செய்ய வேண்டியவை

புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதம் ஆனி மாதமாகும். தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரத்தில் நடராசப் பெருமானாக ஆக இருக்கும் சிவபெருமானுக்கு செய்யப்படும் ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பூஜை வழிபாடு தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனித் திருமஞ்சனம் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று செய்யப்படுகிறது. அந்த ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வருட காலத்தில் சிவபெருமானுக்கு விரதம் மேற்கொண்டு வழிபடுவதற்கு ஆறு நாட்கள் மிக சிறந்த தினங்களாக கூறப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஆனி உத்திர நட்சத்திர தினம். பல சிறப்புகளைக் கொண்ட ஆனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திர தினத்தன்று, சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவது மிகுந்த நன்மை அளிக்கக் கூடியதாகும்.

 தமிழகத்தில் இருக்கும் பல புகழ்பெற்ற சிவாலயங்களில் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று ஆனித் திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று, சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவதால் உடற்பிணிகள் நீங்கும். வாழ்வில் இருக்கின்ற கஷ்ட நிலை குறைந்து வளமை பொங்கும். உத்திரம் நட்சத்திரம் என்பது சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்களின் பாதிப்புகளைக் குறைத்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

மேலும் நாளைய ஆனி உத்திர தினம் முருகப்பெருமானுக்குரிய தினமான சஷ்டி தினத்தில் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் காலையில் சிவபெருமானை வழிபட்டு முடித்தவர்கள், மாலையில் முருகப்பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால் செவ்வாய் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், வீடு நிலம் போன்ற சொத்துகள் அமைப்பு போன்றவை கிடைக்கப் பெறுவார்கள்.

You may also like

Translate »