Home ஆன்மீக செய்திகள் ஆண்களுக்கு,பெண்கள் விரைவில் திருமணம் நடக்க

ஆண்களுக்கு,பெண்கள் விரைவில் திருமணம் நடக்க

by admin
Uthira-pasupatheeswarar-Temple_அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவில்- திருசெங்காட்டங்குடி

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க

1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.

2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.

3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை
செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.

ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம

இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற ÷
வண்டும். திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு
முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.

நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:

இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு
மணம் கைகூடும்.

துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது
ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புஷ்பதா மத்மயம் பாது
நாபிம் ஸெளபாக்ய தாயிணி
கடிதம் குண்டலனி பாது
ஊரு வாத வந்திதா
ஜெனனீ ஜானுனீ பாது
ஐஸ்கே சகல வந்திதம்
நாராயணப் ப்ரியே பாது
ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
ஸங்கடே விடிமே துர்கே
பயே வாதே மஹா ஹவே
ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
துளஸீ ஸர்வத ஸதா
இதீதம் பரமம் குஹ்யம்
துளஸ்யா கவசம் முதா
துளஸீ கானனே திஷ்டன்
ஆஸீ னோவா ஜபேத்யதி
ஸர்வவான் காமான் அவாப் னோத
விஷ்ணு சாயுஜ்ய முச்யதி

எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

நல்ல வரன் அமைய மந்திரம்

அபிராமி அந்தாதி பதிகம்

அதிசயமான வடிவுடை
யாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
வல்லி துணை இரதி
பதிசய மானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாம
பாகத்தை வவ்வியதே

தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
அமர்ந்தருளினாள்.

திருமணம் நிறைவேற மந்திரம்

திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.

பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அ
பிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும்
வாய்க்குமோ.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்க

சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க
கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.

1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய
ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே
விதிசதமகாத்யா திவிஷத:

2. கராளம் பத் க்ஷவேளம்
கபளித வத: கால கலநா
நசம்போ: தந்மூலம்தவ
ஜனநி தாடங்க மஹிமா

(அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.

சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõம்பிகை ஸ்தோத்திரம்

அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.

ஸ்ரீ மாதவீ கானனஸ்தே – கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)

வாதபீதடே வாமபாகே – வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா – பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)

ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா – திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)

ஆஷாடே மாஸே ஸுபுண்யே – சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா – வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் – கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)

ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் – வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் – தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)

ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் – தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்தியா – புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்:  (ஸ்ரீ)

தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்

இது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையில் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையி
ல்லாமல் சொல்லவும்.

ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே

பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே

புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே

தீர்க்க சௌமாங்கல்யம் பெற

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.

ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;

உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.

மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட
வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
யாவது அறிந்தனமே.

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.

ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திரு
வடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.

நல்ல குழந்தைகளாக வளர

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே

மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும்
அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!

ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே

அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு
ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !

குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ
கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த
செல்வமோ தாமரைத் திருவடிகள்.

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ

வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே

திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இத
யத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்÷
டா?

கல்யாண சித்தி பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து
அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.
தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல – தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா

மந்திரம்

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:

ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்

தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத

தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

நரசிம்ம மந்திரம்

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
உக்ரம் வீரம் – அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
ர÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ

மூலமந்திரம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்

துக்கம் விலக மந்திரம்

துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம். ÷க்ஷமம் வருவது நிஜம்

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,
ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி
அம்மாளை ஜெபிக்கிறேன்.

You may also like

Translate »