Home ஆன்மீக செய்திகள் திசாபுத்திக்கேற்ப விரதம் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள்

திசாபுத்திக்கேற்ப விரதம் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள்

by admin
Viratham_திசாபுத்திக்கேற்ப விரதம் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள்

நமது சுய ஜாதகத்தில் எந்த திசை, எந்த புத்தி நடக்கின்றது என்பதைப் பார்த்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை நாம் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும்.

குறிப்பாக செவ்வாய் திசையில் சனி புத்தியோ, வியாழன் திசையில் சுக்ர புத்தியோ நடைபெறுமேயானால் அந்த ஜாதகருக்குத் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. ஆரோக்கியத் தொல்லையும் உண்டு. அருகில் இருப்பவர்களாலும் தொல்லை ஏற்படலாம். இதுபோன்ற பகை கிரகத்தின் திசாபுத்தி நடைபெறும் பொழுது வைரவர் வழிபாடும், வராஹி வழிபாடும், துர்க்கை வழிபாடும், பிரதோஷ காலத்தில் நந்தி தேவர் வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

பொதுவாக சூரிய திசை நட்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் தரும்.

புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.

You may also like

Translate »