ஜோதிர சாஸ்திரப்படி செம்பு மோதிரம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளையும் விரட்ட உதவும். பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும்தன்மை அதிகம். உலோகங்களில் மிகவும் பழமைவாய்ந்த தாமிரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, நோய் எதிர்ப்புசக்தியையும் அதிகரிக்கும்
தாமிரத்தால் ஆன பாத்திரத்தில் சாப்பிட்டாலும்கூட நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காப்பர் மோதிரம் கிருமிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கும் எனச் சொல்லப்படுகிறது. செம்பு மோதிரம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிப்பதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்பெறச் செய்யும்.
செம்பு மோதிரம் அணிவது வீட்டின் வாஸ்துவை சிறப்பாக மாற்றும். வீட்டுக்குள் நேர்மறை சக்திகளையும் இது அதிகரிக்கும். செம்பு மோதிரம் அணியும்போது சூரிய திசை செய்யும் சில கெடுதல்களையும் அதுதடுக்கும். உடல் வெப்பநிலையை சீராக வைப்பதோடு, செம்பு மோதிரம் கோபத்தையும் கட்டுப்படுத்தும். செம்பு மோதிரம் உங்கள் அன்றாட வாழ்க்கை, வேலையில் இருக்கும் தடைகளையும் விலக்கும்.
வாழ்வை ஒரே இடத்தில் பிடித்துப்போடும் சூர்ய மகாதசாவின் பாதிப்புகளையும் இது குறைக்கும். உடல் வீக்கம், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதிலும் செம்புமோதிரம் முக்கியப்பங்கு வகிக்கிறது.அடிக்கடி வரும் தலைவலிக்கும் செம்பு மோதிரம் வேட்டு வைக்கும்.