Home உடல் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவ பலன்கள்

சித்த மருத்துவ பலன்கள்

by admin
சித்த மருத்துவ பலன்கள்










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மருத்துவ பலன்கள்

தினமும் 5 ஆவாரம்பூ அல்லது 1 கோவை பழம் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மூளை பலம் பெற எலுமிச்சை பழம் மிகவும் நல்லது.

விளாம்பூக்களை சுத்தம் செய்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி உள்ளுக்கு சாப்பிட்டு வர எலி விஷம் நீங்கும்.

தீப்புண்ணால் தோலின் நிறம் மாறி வெள்ளையாக இருந்தால், வேப்பம்பட்டை கஷாயம் செய்து பாட்டிலில் வைத்து குலுக்கி வரும் நுரையை வடு மீது தடவி வர தோல் பழைய நிறம் பெறும்.

காலில் முள் குத்திய இடத்தில் முள்ளை எடுத்த பின் வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அணலில் வாட்டி சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி பறந்து விடும்.

நாவல் பழம் வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை ஆற்ற வல்லது.

கருந்துளசி இலைச்சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வர கபக்கட்டு வெளியேறும்..

வெள்ளைப்பூண்டை கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.

தும்பை இலைச்சாறு எல்லா விஷக்கடிகளுக்கும் சிறந்த்து.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்குப்பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

 வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேக வைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தாலும் முடி உதிர்வு நிற்கும். பேன் நீங்கும்.

நல்ல சுண்ணாம்பில் விளக்கெண்ணெய் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

You may also like

Leave a Comment

Translate »