Home ஆன்மீக செய்திகள் கடவுள் நமக்கு எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்..

கடவுள் நமக்கு எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்..

by admin
கடவுள் நமக்கு எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்..

கடவுள் நமக்கு எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்..

உண்மைச் சம்பவம் சதுரகிரியில்

ஒரு பெண்மணி சதுரகிரி சந்தன மகாலிங்கத்தின் பெருமையைக் கேள்விப்பட்டு நீண்டநாளாக சதுரகிரிக்கு செல்ல விருப்பம் கொண்டிருந்தார். அவர் கணவரிடம் சதுரகிரியின் பெருமையைக்கூறி குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்தனர்.

பலர் கூறிய அறிவுரைகளின்படி மூன்று டார்ச் லைட்டுகளை புதிதாக வாங்கிக்கொண்டனர். இரவில் மலை ஏற ஆரம்பித்தனர். பாதி வழி சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர் வைத்திருந்த டார்ச் அணைந்து விட்டது. அதை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. இதே போல் மற்றவர்களின் டார்ச் விளக்கும் அணைந்து விட்டது. டார்ச் இல்லாமல் இனிமேல் பயணத்தை தொடர முடியாது. அதனால் இங்கேயே இப்படியே படுத்து தூங்கிவிட்டு காலையில் மலை ஏறுவோம் என்று முடிவெடுத்தனர்.

சற்று நேரம் கழித்து ஒருவர் யதார்த்தமாக டார்ச்சை அசைக்க எரிய ஆரம்பித்தது. அதே போல் மற்ற டார்ச் விளக்குகளும் பின் எரிய ஆரம்பித்தன. டார்ச் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது சற்று தொலைவில் யானை கூட்டம் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மகளிடம் சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே வா. உனக்கு துணையாக இருப்பார் என்று அந்த அம்மணி சொல்ல அதறகு அந்தக்குழந்தை நான் எனக்கு பிடித்த நாயின் பெயரைத்தான் சொல்வேன் என்று அவர்கள் வீட்டு நாய்க்குட்டி பெயரைச் சொல்லியிருக்கிறாள். உடன் அங்கே ஒரு நாய்க்குட்டி வந்து விட்டது. அது அவர்களுடன் சந்தன மகாலிங்கம் கோவில் வரை துணையாக வந்திருக்கிறது.

பலருக்கு நாய் துணையாக வந்த அனுபவம் உள்ளது. சந்தனமகாலிங்கம் கோவில் அருகில் நாய்கள் நிறைய இருப்பதைக் காணலாம். ஆனால் நடு இரவில் வழிதெரியாமல் பயந்து தவிப்பவர்களுக்கு சரியான நேரத்தில் வந்து உதவுவதுதான் ஆச்சரியம். யானைக்கூட்டங்களிலிருந்து தங்களைக் காக்கவே ஈசன் தங்கள் டார்ச் விளக்குகளை அணைத்து தங்களைக் காத்துள்ளான் என்று ஆனந்தப்படுகிறார்கள்.

ஓம் நமசிவாய!

You may also like

Translate »