Home அதிர்ஷ்டம் கடுமையான கடனும் காணாமல் போய் பணத்தை அதிகமாக சேர்க்க இந்த மரத்தின் வேரை தாயத்தாக கட்டிக் கொள்ளுங்கள்!

கடுமையான கடனும் காணாமல் போய் பணத்தை அதிகமாக சேர்க்க இந்த மரத்தின் வேரை தாயத்தாக கட்டிக் கொள்ளுங்கள்!

by admin
vanni-maram-கடுமையான கடனும் காணாமல் போய் பணத்தை அதிகமாக சேர்க்க இந்த மரத்தின் வேரை தாயத்தாக கட்டிக் கொள்ளுங்கள்!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எப்பேர்ப்பட்ட கடுமையான கடனும் காணாமல் போகச் செய்யும் இந்த மரம் விநாயகருக்கு உகந்த மரமாகும். விநாயகருக்கு உகந்த மரங்களில் அரசமரமும் ஒன்று. அரச மரத்தின் இலைகளில் சாட்சாத் பிள்ளையாரின் அம்சம் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அதே போல இந்த மரமும் பிள்ளையாருக்கு இஷ்டமான ஒரு மர வகையாகும். இம்மரத்தின் உடைய வேரை மட்டும் எடுத்து நாம் தாயத்தாக கட்டிக் கொண்டால் கடன்கள் யாவும் நீங்கி பணத்தை கோடிகோடியாக பெருக்கிக் கொள்ள முடியும். அப்படி என்ன மரம் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அதிக பலன்களை கொடுக்கும் இந்த மரம் மிகவும் வசீகரமானவை. இந்த மரத்தின் இலைகள் முதல் வேர் வரை அனைத்துமே ஆன்மீக பயனுள்ளவையாகும். விருதாச்சலம், விருதகிரி ஆகிய இடங்களில் மிக பழமையான மரங்கள் இன்றும் கம்பீரமாக இருப்பதாக கூறப்படுகிறது. தெய்வீக சக்தி கொண்டுள்ள இந்த மரத்திற்கு பெயர் ‘வன்னி’ ஆகும். வன்னி மரத்திற்கு இருக்கும் சக்திகளை கேட்கும் பொழுது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

விருதாச்சலத்தில் இருக்கும் மிகப் பழமையான வன்னி மரம் விபசித்தி முனிவர் என்கிற ஒருவரால் மிகவும் புகழ்பெற்று விளங்கியது. வன்னி மரத்திற்கு கீழ் அமர்ந்து கொண்டு தன்னுடைய சிஷ்யர்களுக்கு கூலியாக அம்மரத்தின் இலைகளைப் பறித்து கொடுப்பது வழக்கம். எந்த சீடன் அதிகமாக உழைத்து களைத்துப் போகிறானோ அவனுக்கு அந்த இலைகள் அனைத்தும் தங்கமாக மாறிவிடும். உழைக்காமல் சோம்பேறித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் சீடனுக்கு அது வெறும் இலையாக மட்டுமே இருக்கும். இது கல்வெட்டுகளிலும், வரலாற்றிலும் கூறப்பட்டுள்ள சான்றுகளாக இருக்கின்றன.

இன்றும் அக்கோவிலில் ஜீவசமாதி அடைந்த விபசித்தி முனிவர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இங்கு வரும் பக்தர்களுக்கு குழந்தைப்பேறு மற்றும் மனநல குறைபாடு சரி ஆகி விடுவதாக மக்களால் நம்பப்பட்டு வருகிறது. வீட்டில் வன்னி மரத்தை வளர்த்தால் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். சுவாசக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும். வன்னி மரத்தினுடைய காய், பட்டை, வேர், இலைகள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதை செய்யும். வன்னி மர விநாயகரை வணங்குபவர்களுக்கு வாழ்க்கையில் பணப்பிரச்சனை என்பதே இருக்காதாம். வன்னி மரத்திற்கு அடியில் வீற்றிருக்கும் விநாயகர் மற்ற விநாயகர்களை விட மிகவும் சக்தி வாய்ந்தவர் ஆவார். இந்த மரத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்லும் வேரை முறைப்படி எடுத்து தாயத்து செய்து கழுத்தில் அல்லது கை பட்டையில் கட்டிக் கொண்டால் எப்பேர்ப்பட்ட கடுமையான கடனும் தீர்ந்து பணம் என்பது மழையாகக் கொட்டும்.

எத்தகைய மரமாக இருந்தாலும் அது கரையாண் அரிக்கும், ஆனால் இந்த மரத்திற்கு கரையான் அரிப்பு என்பது கிடையவே கிடையாது. அத்தகைய வலிமை வாய்ந்த இந்த வன்னி மரம் சிவபெருமான் வீற்றிருக்கும் ஸ்தலங்களில் தலவிருட்சமாக காட்சியளிக்கும். அவற்றைத் தொட்டு வணங்கி 11 முறை வலம் வந்து இந்த வேரை எடுத்து கட்டிக் கொண்டால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் தொலையும். கோடி கோடியாக கடன் இருந்தாலும் அவைகள் விரைவாக நீங்கி வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் வண்ணி மரத்தின் காயைப் பொடி செய்து சாப்பிட்டு வரலாம். சகல தோஷங்கள் நீங்க வன்னி மரக்கன்றை வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் நட்டு பராமரித்து வாருங்கள்.

You may also like

Leave a Comment

Translate »